விடுமுறையால் மின் நுகர்வு 28 கோடி யூனிட்களாக சரிவு

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை- தொடர் விடுமுறையால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் 28.97 கோடி யூனிட்களாக சரிந்தது. தமிழகம் முழுதும் ஒரு நாள், அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது.அதன்படி, தினசரி மின் நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ளது. இது, கோடை காலத்தில் 35 கோடி யூனிட்களை தாண்டுகிறது.இந்தாண்டு ஏப்., 29ல் மின் நுகர்வு 38.80 கோடி யூனிட்களாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை- தொடர் விடுமுறையால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் 28.97 கோடி யூனிட்களாக சரிந்தது.




latest tamil news


தமிழகம் முழுதும் ஒரு நாள், அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது.அதன்படி, தினசரி மின் நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட்களாக உள்ளது. இது, கோடை காலத்தில் 35 கோடி யூனிட்களை தாண்டுகிறது.இந்தாண்டு ஏப்., 29ல் மின் நுகர்வு 38.80 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. பின், ஜூலை, ஆகஸ்டில் தென் மாவட்டங்களில் பெய்த மழையால், தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்கள் என்ற வழக்கமான அளவில் இருந்தது.



செப்., இறுதியில் வெயில் சுட்டெரித்தது. தசரா, ஆயுத பூஜை பண்டிகை கால வியாபாரத்தை முன்னிட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட்டன. இதனால் மின் நுகர்வு மீண்டும் 30 கோடி யூனிட்களை தாண்டிய நிலையில், செப்., 30ல், 33.08 கோடி யூனிட்களாக இருந்தது.ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நேற்றும், நேற்று முன்தினமும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை. திங்களன்று அவை செயல்பட்டாலும், ஊழியர்கள்அன்று ஆயுத பூஜை கொண்டாடி வீட்டிற்கு சென்றனர்.


latest tamil news



சிலர், தொடர் விடுமுறையால் வெள்ளிக் கிழமையே சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். இதனால் மின் நுகர்வு குறைந்து நேற்று முன்தினம், 28.97கோடி யூனிட்களாக சரிந்தது.இது, இம்மாதம் 1ம் தேதி 31.20 கோடி யூனிட்; 2ல் 28.38 கோடி யூனிட்; 3ல் 30.93 கோடி யூனிட்களாக இருந்தது. நேற்று, சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் நேற்று மின் நுகர்வு மேலும் குறைய வாய்ப்புள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202210:14:40 IST Report Abuse
எவர்கிங் டாஸ்மாக் விற்பனை குறைந்தால் தான் தீராவிஷ மாடலில் கவலைப்படுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X