சென்னைக்கு இன்று 1,050 சிறப்பு பஸ்கள்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை--ஆயுத பூஜை விடுமுறைக்கு சென்றோர் சென்னை திரும்ப வசதியாக, பல்வேறு ஊர்களில் இருந்து இன்று, 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாட்டில், ஆயுத பூஜை நேற்று முன்தினமும், விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை நாட்கள் செவ்வாய், புதனில் வந்ததால், திங்களன்று ஒருநாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--ஆயுத பூஜை விடுமுறைக்கு சென்றோர் சென்னை திரும்ப வசதியாக, பல்வேறு ஊர்களில் இருந்து இன்று, 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.




latest tamil news


நாட்டில், ஆயுத பூஜை நேற்று முன்தினமும், விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை நாட்கள் செவ்வாய், புதனில் வந்ததால், திங்களன்று ஒருநாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை இரவே வெளியூர் செல்லத் துவங்கினர்.



அந்த வகையில், சென்னையில் இருந்து, நான்கு நாட்களில் அரசு பஸ்களில் மட்டும்,ஆறு லட்சம் பேர் வெளியூர் சென்றனர். ஆம்னி பஸ்களில், சென்னையில் இருந்து1.50 லட்சம் பேர் வெளியூர் சென்றனர்.அவர்கள், பண்டிகை முடிந்து தொழில் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர்.



latest tamil news


இதற்காக வழக்கமாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களை விட, நேற்று, 1,050 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதன் வாயிலாக, 18 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.அதேபோல இன்றும், 1,050 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.



இன்று பயணிக்கும் வகையில், 9,500 பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.மேலும், பயணியரின் தேவைக்கு ஏற்ப கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோவை, விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க, சிறப்பு பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202213:39:48 IST Report Abuse
duruvasar சிறப்பு பேருந்துகள் என்பதால் அவசியம் எல்லா சாலையோர சிற்றுண்டிகளில் நின்று செல்லும் என்பது உறுதி .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
06-அக்-202209:13:56 IST Report Abuse
sankar வருசா வருஷம் கேட்டு புளிச்சுப்போச்சு - ஆம்னி பஸ்ல ஏரோபிளேன் சார்ஜ் வாங்குறாங்க - மினிஸ்டர் சொல்றாரு - அதில் சாதாரண மக்கள் பயணிப்பது இல்லை என்று - மக்களையே எப்படி பிரிக்கிறார் பாருங்கள்
Rate this:
Cancel
06-அக்-202208:23:12 IST Report Abuse
எவர்கிங் இருக்கும் ஓட்டை உடைசல் களை கூடுதல் இயக்கம் செய்தால் சிறப்புப் பேருந்தா?!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X