பத்து பசுக்களை கொன்ற புலி சிக்கியது: மக்கள் நிம்மதி

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மூணாறு--மூணாறு அருகே பத்து பசுக்களைக் கொன்ற புலி வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கியது. பார்வை குறைபாட்டில் தவிக்கும் புலிக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.அங்கு தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமான பசுக்கள் அடைக்கும் கட்டடத்திற்குள் அக். 1ல் இரவில் நுழைந்த புலி ஒரு கன்று உள்பட ஐந்து பசுக்களை கொன்றது. மறுநாள் அந்த கட்டடத்திற்கு புலி வரும் என

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மூணாறு--மூணாறு அருகே பத்து பசுக்களைக் கொன்ற புலி வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கியது.latest tamil news


பார்வை குறைபாட்டில் தவிக்கும் புலிக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.அங்கு தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமான பசுக்கள் அடைக்கும் கட்டடத்திற்குள் அக். 1ல் இரவில் நுழைந்த புலி ஒரு கன்று உள்பட ஐந்து பசுக்களை கொன்றது. மறுநாள் அந்த கட்டடத்திற்கு புலி வரும் என இரவில் வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால் அதன் அருகில் பசுக்களை கட்டி வைத்திருந்த வேறொரு கட்டடத்திற்குள் நுழைந்து ஒரு கன்று உள்பட ஐந்து பசுக்களை கொன்றது.இரு நாட்களில் 10 பசுக்களை புலி கொன்றதால் வனத்துறையினர் உஷாராகினர். அதனை பிடிப்பதற்கு மூன்று இடங்களில் கூண்டு அமைத்தனர். வனத்துறையினர் இரண்டு குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டும் புலி தென்படவில்லை.

கூண்டில் சிக்கிய புலி

இந்நிலையில் முதல் நாள் பசுக்களைக் கொன்ற கட்டடம் அருகே அமைத்த கூண்டில் கட்டி வைத்திருந்த கன்றை நோக்கி வந்த புலி நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கூண்டில் சிக்கியது. அதனால் மிரண்ட புலி ஆக்ரோஷமாக உறுமியவாறு இருந்ததால் தார் பாயால் மூடினர். அதன்பிறகு வனத்துறையினர் கிரேன் வர வழைத்து நான்கு மணி நேரம் போராடி புலியுடன் கூடிய கூண்டை லாரியில் ஏற்றி நள்ளிரவு 1:00 மணிக்கு வனத்துறை மத்திய நர்சரிக்கு கொண்டு சென்றனர்.புலி கூண்டில் சிக்கியதை அறிந்து மூணாறின் பல்வேறு எஸ்டேட்டுகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். அவர்கள் புலியை காண வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

கண்புரையால் புலி அவதி

வனத்துறை நர்சரியில் புலியை நேற்று வயநாடு வனத்துறை கால்நடை டாக்டர் அருண்சக்கரியா, மூணாறு டாக்டர் நிஷாரேய்ச்சல் பரிசோதித்தனர். 9 வயதான பெண் புலி கண் புரை நோயால் பாதித்து இடது கண் பார்வை குறைபாடு உள்ளது. அதனால் வனங்களில் உணவு தேட இயலாத நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பசுக்களை எளிதில் வேட்டையாடியதாகவும், அவை கட்டி வைக்கப்பட்டிருந்ததால் அடித்து கொன்ற பசுக்களை இழுத்து செல்ல இயலாமல் ஒவ்வொன்றாக கொன்றதாக தெரியவந்தது.

புலிக்கு ஏற்பட்டுள்ள பார்வை குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க சிக்கல் உள்ளதால், அதனை பாதுகாப்பான இடத்தில் விட திட்டமிட்டுள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகம் இல்லாத எளிதில் இரை கிடைக்கும் வனப்பகுதியில் புலியை விட முடிவு செய்துள்ளனர்.வயநாடு பத்தேரி, திருச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையங்கள், பரம்பிகுளம், தேக்கடி ஆகிய புலிகள் காப்பகம் ஆகியவற்றில் விட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


latest tamil newsநிம்மதி

கடந்த மூன்று நாட்களாக அச்சுறுத்தி வந்த புலி சிக்கியதால் தொழிலாளர்கள் நிம்மதியடைந்ததுடன் நேற்று முதல் பணிக்கு திரும்பினர். புலி பசுக்களை கொன்ற நாள் முதல் சம்பவ இடத்தில் முகாமிட்டு அதனை பிடிக்க தீவிரம் காட்டிய மூணாறு டி.எப்.ஓ., ராஜூ கே.பிரான்சிஸ், ரேஞ்சர் அருண் மகாராஜா ஆகியோரை தொழிலாளர்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202222:05:51 IST Report Abuse
sunny raja இன்னொருவர் இடத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடுவது மனித இனம். ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுபவர்கள் விடுதலை போராளிகள். காட்டை ஆக்கிரமித்து விலங்குகளின் வாழ்வாதாரத்தை பறித்தால் விலங்குகளும் போராடும். காட்டை விட்டு மனிதன் வெளியேற வேண்டும்.
Rate this:
Cancel
beindian - doha,கத்தார்
06-அக்-202211:28:12 IST Report Abuse
beindian மனிதன் பசிக்காக சாப்பிட்டால் மனிதனை கொன்றுவிடுவார்கள், ஏனென்றால் நாலறிவு மனிதனுக்கு ஐந்தறிவு மிருகங்களை கண்டால் பயம்.
Rate this:
Cancel
Raj -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202209:06:22 IST Report Abuse
Raj சிக்கியது அதே புலிதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X