துாய்மை நகர பட்டியலில் திருப்பூர் 377வது இடம்! பின்தங்கியது ஏன்?

Added : அக் 06, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
திருப்பூர் : துாய்மை நகரங்களுக்கான பட்டியலில் திருப்பூர் 377 வது இடத்தைப் பெற்று மிகவும் பின் தங்கியுள்ளது. இதற்கு நகரில் பெருமளவு நிலவும் மாசு குறைபாடு காரணமாகத் தெரிய வருகிறது.'துாய்மை இந்தியா' திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதில் துாய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு கடந்த 2016-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த ஆய்வுக்கான நகரங்கள்
Tiruppur,Clean India,Swachh Survekshan,தூய்மை இந்தியா, திருப்பூர், தூய்மை நகரங்கள், Clean Cities,Smart City

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : துாய்மை நகரங்களுக்கான பட்டியலில் திருப்பூர் 377 வது இடத்தைப் பெற்று மிகவும் பின் தங்கியுள்ளது. இதற்கு நகரில் பெருமளவு நிலவும் மாசு குறைபாடு காரணமாகத் தெரிய வருகிறது.

'துாய்மை இந்தியா' திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதில் துாய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு கடந்த 2016-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த ஆய்வுக்கான நகரங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 'ஸ்வச் சர்வேக்ஷன்' என்ற பெயரில் இந்த ஆய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டுக்கான ஆய்வு, 75-வது சுதந்திர தின நிறைவு முன்னிட்டு 'தூய்மை அமிர்தப் பெருவிழா' மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பல்வேறு தர வரிசை அடிப்படையில், மொத்தம், 4,354 நகரங்களில் நடத்தப்பட்டது.இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள 13 மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், தமிழகம், 1,450 மதிப்பெண் பெற்று கடைசி இடம் பெற்றது.இதில், 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்கள் பட்டியலில், இந்துார் முதல் இடத்தைப் பெற்றது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இது முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் 2வது இடமும், நவி மும்பை 3 வது இடமும் பெற்றுள்ளன.தமிழகத்தில், கோவை 42-வது இடமும், சென்னை 44-வது இடம், மதுரை, 45-வது இடமும் பெற்றன. ஒன்று முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் திருப்பதி, மைசூரூ, புது டில்லி நகரங்கள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.மேலும், தமிழகத்தில் உள்ள பிற நகரங்களில், சேலம் 221-வது இடம்; துாத்துக்குடி 226- வது இடம்; நாகப்பட்டினம் 261வது இடம்; திருச்சி 262வது இடம்; புதுக்கோட்டை 267- வது இடம், திருவண்ணாமலை 271-வது இடம்; கும்பகோணம் 287-வது இடம்; தாம்பரம் 288வது இடம்; வேலூர் 291-வது இடம்; கடலூர் 297-வது இடம்; ஆவடி 302-வது இடம்; நெல்லை 308- வது இடம்; திண்டுக்கல் 316 -வது இடம்; ஈரோடு 322 -வது இடம்; திருப்பூர், 377 வது இடமும் பெற்றுள்ளன.இதற்கு அடுத்தபடியாக, ஆம்பூர் 338 -வது இடம், ராஜபாளையம் 339 -வது இடம், காஞ்சிபுரம் 356- வது இடத்தையும், காரைக்குடி 371-வது இடத்தையும் பிடித்துள்ளன.திருப்பூரைப் பொறுத்த வரை மாசு நிறைந்த நகரமாகவே இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகரில் எங்கும் குவிந்து காணப்படும் குப்பை மலை இதன் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.இந்த ஆய்வு துவங்கப்பட்ட போது, பச்சை மற்றும் சிவப்பு நிறம் மூலம் குறியீடு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், பச்சை என்ற குறியீட்டுக்கே எந்த நகரமும் தேர்வாகவில்லை.latest tamil news


இதையடுத்து இதற்கான அளவீடுகளில் பின்னர் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டது.திருப்பூரைப் பொறுத்தவரை ெதாழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் காற்று மாசுபாடு நிறைந்துள்ளது. மேலும், நகரில் பாயும் நொய்யல் ஆறும், அதில் வந்து சேரும் ஓடைகளும் சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவுகள் நிறைந்ததாக உள்ளன.தேங்கி கிடக்கும் குப்பைகள்; தரம் பிரித்து உரிய மாற்று வழிமுறை மற்றும் மறு சுழற்சி முறையில் முழுமையாக அகற்றப்படாத மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் காரணமாக ஏற்படும் மாசு ஆகியன இந்த ஆய்வில் திருப்பூர் நகருக்கு உரிய மதிப்பெண்கள் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:நகரில் மாசு குறைக்கும் வகையில் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாசு அளவீடு செய்யப்படுகிறது. இது தவிர மாநகராட்சி சார்பிலும் 8 இடங்களில் மாசு அளவீடு கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இவற்றின் மூலம் மாசு அளவு கண்காணிக்கப்படுகிறது.அதனடிப்படையில், மாசு குறைக்கும் வழிமுறைகள் குறித்து உரிய நிபுணர் குழு மூலம் கருத்து பெறப்படும். அதனடிப்படையில் இதற்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.துாய்மை நகரமாக மாற்றுவதற்கான மாநகராட்சியின் முயற்சியில் மாசு இல்லாத நகரமாகவும் மாற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் உரிய ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூரைப் பொறுத்தவரை காற்று மாசுபாடு நிறைந்துள்ளது. நகரில் பாயும் நொய்யல் ஆறும், அதில் வந்து சேரும்ஓடைகளும் கழிவுகள் நிறைந்ததாக உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-அக்-202209:12:26 IST Report Abuse
அப்புசாமி பின்னலாடை, தயார் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்கணும். அதுக்கு விலையும். கட்டுபடியாகணும்னா இதுமாதிரி சாயக்கழிவுகளை அப்பிடியே தொறந்து உட்டு ஊரை நாசம் பண்ணனும் அப்பத்தான் இந்தியப்பொருளாதாரம் உயரும். உக்ளூர் மக்ஜளின் ஆரோக்கியம் எப்பிடிப் போனாலும் கவலை இல்லை. திருப்பூர் கார்பரே முதலாளிகள் எங்கேயோ ஆரோக்கியமான சூழலில் வசிப்பார்கள்.
Rate this:
Cancel
06-அக்-202208:19:46 IST Report Abuse
எவர்கிங் விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தான்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
06-அக்-202210:42:08 IST Report Abuse
Rajaஆமா. இதுக்கு முன்னாடி இங்க பாலாறும் தேனாறும் ஓடிட்டு இருந்தது....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-அக்-202206:50:59 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டாலர் சிட்டியில், டாலர், யூரோ, தினார் கலர்களில் கழிவுகள் வெளியேறுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X