அனுமதி மறுத்தும் 60ம் கல்யாணம் அமர்க்களம்: தி.மு.க., நிர்வாகி அத்துமீறல்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (34) | |
Advertisement
திருமழிசை-திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில், அனுமதி மறுத்தும், தி.மு.க., நகரச் செயலரின் மணி விழா நேற்று நடந்தது. கோயிலைச் சுற்றி மணி விழா விளம்பர பேனர்கள் வைத்து அமர்களப்படுத்தப்படுத்தப்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



திருமழிசை-திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில், அனுமதி மறுத்தும், தி.மு.க., நகரச் செயலரின் மணி விழா நேற்று நடந்தது. கோயிலைச் சுற்றி மணி விழா விளம்பர பேனர்கள் வைத்து அமர்களப்படுத்தப்படுத்தப்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




latest tamil news


திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை. மாலை மாற்றி கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.இருப்பினும் இக்கோயிலில், ஆண்டாள் சன்னதி முன் நேற்று, திருமழிசை தி.மு.க., நகர செயலர் முனுசாமி மற்றும் இவரது மனைவியும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அமுதா ஆகியோரின் 60வது மணி விழா நடந்தது.



கோயில் வழக்கத்தை மீறாமல் இருக்க, அர்ச்சகர்கள் பங்கேற்க மறுத்து விட்டனர். அதையடுத்து, வெளியாட்களை கொண்டு நகர செயலரின் மணி விழா நேற்று நடத்தப்பட்டது.மணி விழாவில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பூந்தமல்லி ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், எழும்பூர் ஐ.பரந்தாமன் உட்பட தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்றதால் பெருமாள் கோயில் வளாகமே அமர்க்களப்பட்டது.



latest tamil news


கோயிலைச் சுற்றிலும், மணி விழா விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்திருந்தன. இது பக்தர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.கோயில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''கோயில் வளாகத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி தான் நடந்தது. பிற நிகழ்ச்சிகள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இது வழக்கமாக நடப்பதுதான்,'' என, தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIDHURAN - chennai,இந்தியா
06-அக்-202217:40:02 IST Report Abuse
VIDHURAN வோட்டை போட்ட ஜனங்களின் outrage இந்த நிகழ்விற்கு பொறுப்பாகும். இந்த ஜனங்கள் இன்னும் வருகின்ற தேர்தலில் கூட இவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். அவர்களுடைய தரத்திற்கு உகந்த காட்சியைத்தான் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் தேர்ந்து eduppaargal
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
06-அக்-202214:18:33 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பாவங்கள் அனைத்தும் இந்துவை கொல்லும் கட்சி என தெரிந்து வாக்களித்த அணைத்து திமுக வாக்காளருக்கு போகட்டும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202213:36:02 IST Report Abuse
duruvasar திராவிட மாடல் = அடாவடிதனம். இன்னும் இதை புரிந்து கொள்ளாதவர்கள் வடி கட்டிய . . . . .கள் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X