வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருமழிசை-திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயிலில், அனுமதி மறுத்தும், தி.மு.க., நகரச் செயலரின் மணி விழா நேற்று நடந்தது. கோயிலைச் சுற்றி மணி விழா விளம்பர பேனர்கள் வைத்து அமர்களப்படுத்தப்படுத்தப்பட்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
![]()
|
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை. மாலை மாற்றி கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.இருப்பினும் இக்கோயிலில், ஆண்டாள் சன்னதி முன் நேற்று, திருமழிசை தி.மு.க., நகர செயலர் முனுசாமி மற்றும் இவரது மனைவியும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அமுதா ஆகியோரின் 60வது மணி விழா நடந்தது.
கோயில் வழக்கத்தை மீறாமல் இருக்க, அர்ச்சகர்கள் பங்கேற்க மறுத்து விட்டனர். அதையடுத்து, வெளியாட்களை கொண்டு நகர செயலரின் மணி விழா நேற்று நடத்தப்பட்டது.மணி விழாவில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பூந்தமல்லி ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், எழும்பூர் ஐ.பரந்தாமன் உட்பட தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்றதால் பெருமாள் கோயில் வளாகமே அமர்க்களப்பட்டது.
![]()
|
கோயிலைச் சுற்றிலும், மணி விழா விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்திருந்தன. இது பக்தர்கள் மத்தியில், அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.கோயில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''கோயில் வளாகத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி தான் நடந்தது. பிற நிகழ்ச்சிகள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இது வழக்கமாக நடப்பதுதான்,'' என, தெரிவித்தார்.