'குழம்பி போயிருக்கிறார் திருமாவளவன்'

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
சென்னை : 'தேவையில்லாததை படித்து குழம்பி போயிருக்கும் திருமாவளவன், வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் மோதிக் கொண்டன.'அக்காலத்தில் ஏது ஹிந்து... இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் ஹிந்துக்கள்
திருமாவளவன, குழப்பம், நாராயணன் திருப்பதி, ஹிந்ததுனா சைவம், வைணவம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : 'தேவையில்லாததை படித்து குழம்பி போயிருக்கும் திருமாவளவன், வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை:'ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் மோதிக் கொண்டன.'அக்காலத்தில் ஏது ஹிந்து... இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் ஹிந்துக்கள் இல்லை என்று உரக்க சொல்கின்றனர். இதை தானே குறிப்பிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்' என்கிறார் திருமாவளவன்.இதைத் தானே நாமும் சொல்லி வருகிறோம்.



latest tamil news


ஹிந்து என்பது ஒரு மதமல்ல; வாழ்வியல் முறை. இந்தியா என்ற ஹிந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் ஹிந்துக்கள் தான் என்றே நாம் சொல்கிறோம்.நீங்கள் சொல்வது போல சைவமும், வைணவமும் மோதி கொண்டதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது ஹிந்து என்ற சொல் தானே!மண்ணையும், கல்லையும், புல்லையும், மரத்தையும், கண்ணுக்கு தெரியாததையும், மனதிற்கு பிடித்ததையும் வழிபடும் நம்பிக்கையின் அடிப்படையே, அழிவில்லாத, நிலையான சனாதன தர்மம் என்ற இன்றைய அமைதியான, நிம்மதியான, உண்மையான தர்மத்தை, நெறியை போதிக்கிறது



ஹிந்து தர்மம் என்ற கலாசாரம்.தேவையில்லாததை படித்து குழம்பி போயுள்ளீர்கள் திருமாவளவன். தெளிவு பெறுங்கள்; வெறுப்பு அரசியலை கைவிடுங்கள். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
06-அக்-202216:06:52 IST Report Abuse
Balaji ஹிந்து என்கிற பெயரில் மக்கள் ஒன்றுபட்டு வாழ ஆயத்தமாயிருந்தால் அந்த ஒற்றுமையை நீங்கள் ஏன் குலைக்க விரும்புகிறீர்கள்? மக்களை பிரிப்பதே உங்கள் தொழிலா? மக்கள் ஒன்றுபட்டு விட்டால் உங்களுக்கு கிடைக்காது என்று பயமா? சைவம் வைணவம் மட்டுமல்ல.. இந்த நாட்டில் இருந்ததை ஆராய்ந்து அவைகளை இணைத்து மக்கள் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு இருக்க வழி செய்து இந்த ஆராயும் சனாதனம் என்று அன்றே ஆராய்ந்து சொல்லிவிட்டார். ] அதுவே ஹிந்து மதம். கட்டுப்பாட்டில் அரசு இருக்கும் போதெல்லாம் சைவர்கள் வதைக்கப்பட்டிருக்கிறார்கள் பொதுவாக.. முடிவில் சனாதனம் எல்லாவற்றையும் தாண்டி தனித்துவத்துடன் மக்களின் விருப்ப வழிபாடுகளுக்கு வழி செய்துகொடுத்து ஓங்கி நின்றது என்பதே உண்மை.. ஒன்றுமே விளங்காமல் சும்மா ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் திருமா மற்றும் கூட்டத்தினர்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-அக்-202214:07:34 IST Report Abuse
Ramesh Sargam குழம்பிய சாக்கடையை தெளிவு படுத்த முடியுமா? முடியாது. அந்த குழம்பிய மனிதரை பற்றி பேசி நாம் குழம்பாமல் இருப்பது சிறந்தது.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
06-அக்-202212:40:08 IST Report Abuse
velan என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் .. எங்களுக்கு தெரியும் யாருக்கு ஓட்டு போட கூடாது என்று ... இதுக்கு தானே இவ்வளவு பெரிய ஆராய்ச்சி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X