'மருந்து தட்டுப்பாடு: 4 மாதமாக நீடிக்கிறது'

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை, : ''தமிழகத்தில் நான்கு மாதங்களாக மருந்து தட்டுப்பாடு இருந்து வரும் சூழலில் டாக்டர்கள் மீது பழிபோட்டு, அவர்களை அரசு இடமாற்றம் செய்கிறது,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வேலுார் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு
மருந்து தட்டுப்பாடு, ஆன்டிபயாடிக், உயிர் காக்கும் மருந்து, அரசு மருந்துவமனை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை, : ''தமிழகத்தில் நான்கு மாதங்களாக மருந்து தட்டுப்பாடு இருந்து வரும் சூழலில் டாக்டர்கள் மீது பழிபோட்டு, அவர்களை அரசு இடமாற்றம் செய்கிறது,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வேலுார் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.



அப்போது, அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாததால் பணியில் இருந்த வட்டார அலுவலர் உட்பட இரண்டு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அங்கு 'எக்ஸ்ரே' வசதி இல்லை; மருத்துவமனை பழுதடைந்த கட்டடமாக இருப்பதாக, அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த நான்கு மாதங்களாகவே 'ஆன்டிபயாடிக்' மருந்து மற்றும் உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு, அனைத்து அரசு மருந்துவமனைகளிலும் தட்டுப்பாடு இருந்து வருகிறது.



latest tamil news


எனினும் டாக்டர்கள் இவற்றை வெளியே சொல்லி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என நினைத்தோம். ஆனால் மருந்து இல்லாததற்கு, டாக்டர்களை பலிகடா ஆக்கி தண்டிப்பது வேதனையளிக்கிறது.மேலும் 'எக்ஸ்ரே இல்லை, கட்டடம் சரியில்லை' போன்றவற்றுக்கு டாக்டர்கள் மீது பழி போடுவது, எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-அக்-202206:20:51 IST Report Abuse
Kasimani Baskaran மருந்து இல்லாததற்கு மருந்தைத்தான் பழி சொல்ல வேண்டும். டக்ளஸ் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே மதுரை சுத்தமாகி விட்டது. ஆகையால் டக்ளசை இந்தப்பதவிக்குப்போட்டால் சி(ரி)றப்பாக செயல்படுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X