'பிப்ரவரியில் தான் நிலக்கரி கிடைக்கும்'

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை ; 'தற்போது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் வாயிலாக, வரும் பிப்ரவரியில் தான் நிலக்கரி பெற முடியும்' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துஉள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசு, 2022 - 23ல், 220 கோடி கிலோ நிலக்கரியை இறக்குமதி செய்து பயன்படுத்த, மின் வாரியத்திற்கு அறிவுறுத்தியது. மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யமுடிவானது.இதன்படி, 1,000 கிலோ உடைய டன், 11 ஆயிரத்து 300
பிப்ரவரி, நிலக்கரி, செந்தில் பாலாஜி, தமிழகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை ; 'தற்போது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் வாயிலாக, வரும் பிப்ரவரியில் தான் நிலக்கரி பெற முடியும்' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துஉள்ளார்.அவரது அறிக்கை:

மத்திய அரசு, 2022 - 23ல், 220 கோடி கிலோ நிலக்கரியை இறக்குமதி செய்து பயன்படுத்த, மின் வாரியத்திற்கு அறிவுறுத்தியது. மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யமுடிவானது.இதன்படி, 1,000 கிலோ உடைய டன், 11 ஆயிரத்து 300 ரூபாய் விலையில், 60 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதிக்கு உத்தரவு வழங்கியது. முதல் காலாண்டில் எஞ்சிய, 13 கோடி கிலோ நிலக்கரியை, மத்திய அரசின் வாயிலாக, டன் 16 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்து தர கோரப்பட்டது.



latest tamil news


வரும் 2023 ஜனவரி, பிப்ரவரியில் நிலக்கரி தேவையை ஈடுசெய்யும் வகையில், 73 கோடி கிலோ நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, ஏழு ஒப்பந்த புள்ளிகள்பரிசீலனையில் உள்ளன.பரிசீலனைக்கு பின் விலை புள்ளிகள் திறந்து, எதிர்மறை விலை புள்ளிகள் வாயிலாக முடிவு செய்ய, குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின், நிலக்கரி வந்து சேர குறைந்தது 45 நாட்கள் தேவை.



எனவே, தற்போது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் வாயிலாக, பிப்ரவரியில் தான் நிலக்கரி பெற முடியும். மேலும், ஒப்பந்தபுள்ளிகள் முடிவு செய்யும் நேரத்தில், நிலக்கரி தேவை, இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KS Dilip -  ( Posted via: Dinamalar Android App )
06-அக்-202218:44:49 IST Report Abuse
KS Dilip ஆனா கமிஷன் வந்துடும்லே ... அப்பா..... இப்பத்தான் நிம்மதி
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
06-அக்-202213:31:44 IST Report Abuse
Palanisamy Sekar அய்யோ அய்யயோ அய்யய்யோ..இவ்ளோ விலை கொடுத்தா வாங்குகின்றார்கள். கொடுமை கொடுமை.. கொள்ளையடிக்கின்றார்கள். மாபெரும் கொள்ளை..பகல் கொள்ளை.. எனக்கு இந்த ஆர்டரை கொடுக்க சொல்லுங்கள் நான் வெறும் எட்டாயிரம் ரூபாய்க்கு இவர்கள் சொல்லுகின்ற தரத்தில் கிரேடில் நிலக்கரி கொண்டுவந்து தருகின்றேன். செம பணம் பாக்குறாங்க இந்த இறக்குமதியில்.. யாருங்க அந்த காண்டிராக்டர்? கனிமொழியா அல்லது டி ஆர் பாலுவா? மத்தியில் உள்ள அரசாங்கம் இதில் தலையீடு செய்தல் நல்லதுன்னு சொல்றேன்..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-அக்-202212:27:57 IST Report Abuse
duruvasar நிலக்கரி வரும்போது இங்கதானே இருப்பீங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X