இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': இணைய குற்றவாளிகளை குறி வைத்து சி.பி.ஐ., சோதனை

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்இணைய குற்றவாளிகளை குறி வைத்து 115 இடங்களில் சி.பி.ஐ., சோதனை புதுடில்லி-பண மோசடியில் ஈடுபட்ட இணைய குற்றவாளிகளை குறிவைத்து, சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், 115 இடங்களில் சி.பி.ஐ., நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது. இணையம் வாயிலாக ஆசை காட்டி, பண மோசடியில் ஈடுபடும் கும்பலை ஒடுக்க, சி.பி.ஐ., நேற்று அதிரடியாக களம் இறங்கியது.சர்வதேச போலீஸ்


இந்திய நிகழ்வுகள்
இணைய குற்றவாளிகளை குறி வைத்து 115 இடங்களில் சி.பி.ஐ., சோதனைபுதுடில்லி-பண மோசடியில் ஈடுபட்ட இணைய குற்றவாளிகளை குறிவைத்து, சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், 115 இடங்களில் சி.பி.ஐ., நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.

இணையம் வாயிலாக ஆசை காட்டி, பண மோசடியில் ஈடுபடும் கும்பலை ஒடுக்க, சி.பி.ஐ., நேற்று அதிரடியாக களம் இறங்கியது.சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் பல்வேறு மாநிலங்களின் போலீசாருடன் இணைந்து, 115 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.latest tamil newsஇது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.சர்வதேச அளவில் செயல்படும் இந்த கும்பலின் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையில், சி.பி.ஐ.,க்கு உதவியாக புதுடில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் போலீசார் செயல்பட்டனர்.

இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:இந்த சோதனையில், 1.8 கோடி ரூபாய், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டன.மேலும், 1.89 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மஹாராஷ்டிராவின் புனே, குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களில் செயல்பட்ட இரண்டு, 'கால்சென்டர்'கள் மூடப்பட்டன.அமெரிக்கர்களை குறிவைத்து இந்த மையங்களில் இருந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தங்கம் கடத்திய நால்வர் கைது


புதுடில்லி-மியான்மரில் இருந்து மிசோரம் மாநிலத்துக்குள், ௨௩ கிலோ தங்கம் கடத்தி வந்த நான்கு பேரை, வருவாய் புலனாய்வுத் துறை கைது செய்தது; தங்க கட்டிகளை பறிமுதல் செய்தது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நம் அண்டை நாடான மியான்மரிலிருந்து, வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சோகாவ்தார் எல்லை வழியாக, மேற்கு வங்கத்துக்குள் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.இதை தடுக்கும் வகையில், வருவாய் புலனாய்வு துறை ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், சிலிகுரி - கவுஹாத்தி நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரண்டு வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டன.இவற்றில், ௨௩ கிலோ எடையுள்ள வெளிநாட்டு தங்கக் கட்டிகள், உருளை வடிவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களில் வந்த நான்கு பேரையும் கைது செய்தனர். இவற்றின் மதிப்பு ௧௧.௬௫ கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் ௧௧ கடத்தல் சம்பவங்களில், ௧௨௧ கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் கொலை மிரட்டல்


மும்பை-தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தாரை கொலை செய்யப் போவதாக, கடந்த ஆக., 15ல் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil newsஇந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சர் எச்.என்., ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசியில் நேற்று அழைத்து ஒருவர், அந்த மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும், முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீட்டா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகியோரை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிஉள்ளார்.

அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த இந்த அழைப்பு குறித்து, மும்பை போலீசார் விசாரிக்கின்றனர்.பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த 'இசட்' பிரிவு பாதுகாப்பு, 'இசட் பிளஸ்' பாதுகாப்பாக உயர்த்தப் பட்டது.


தமிழக நிகழ்வுகள்
கஞ்சா விற்றவர் கைதுதிருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, நஞ்சப்பா பள்ளி அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ராயபுரம், சாயப்பட்டறை வீதியை சேர்ந்த சூரியகாந்த், 19 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil newsபூசாரி கொலை: டிரைவர் கைதுதிருப்பூர் : வெள்ளகோவிலில் கோவில் பூசாரியை கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளகோவில், உப்பு பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 51. அருகிலுள்ள மாகாளியம்மன் கோவிலில், பூசாரியாக இருந்து வந்தார். இவர் மனைவி மல்லிகா, 45. இரு மகன்கள் உள்ளனர். மல்லிகா வெள்ளகோவில் நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.இவர்களது வீட்டுக்கு அருகில், கார் டிரைவர் பிரேம்குமார், 32 என்பவர் வசிக்கிறார். தன்னைப்பற்றி ஊருக்குள் மாரிமுத்து பலரிடம் தவறான தகவலை சொல்கிறார் என்று கூறி, அவரிடம், பிரேம்குமார் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றியதில், மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை காரில் கொண்டு சென்று, லக்கமநாயக்கன்பட்டி அருகே அமராவதி ஆற்றில் வீசினார்.இச்சூழலில், கணவரை காணவில்லை என மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், மாரிமுத்துவை, பிரேம்குமார் கொலை செய்தது தெரிந்து, அவரை கைது செய்தனர்.


காஸ் கசிந்து தீ விபத்து: ஆசிரியை உயிரிழப்பு


வடவள்ளி : வடவள்ளி, எம்.ஜி.ஆர்., வீதியை சேர்ந்தவர் கீதாலட்சுமி, 52; தீத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியை. கடந்த, 1ம் தேதி வீட்டில், சுடுதண்ணீர் வைக்க காஸ் ஸ்டவ்வை திறந்து, லைட்டர் மூலம் பற்ற வைக்க முயன்றார்.

லைட்டர் எரியாததால், தீப்பெட்டியால் பற்ற வைத்துள்ளார்.ஏற்கனவே காஸ் லீக்காகி இருந்ததால், தீப்பிடித்து, கீதாலட்சுமி உடையில் பற்றியது. அவரது கதறலை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, தீயை அணைத்தனர். சிகிச்சைக்காக, வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கீதாலட்சுமி உடலில், 37 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மேல் சிகிச்சைக்காக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


மாணவி கொலை: வாலிபருக்கு ஆயுள் உறுதிசென்னை:பிளஸ் 2 மாணவியை கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, அவரது உறவினர் ஜெயராமன் என்பவர் காதலித்துள்ளார். மாணவியின் வீட்டுக்கு வந்த ஜெயராமன், பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார்.அதற்கு, படிப்பை முடித்த உடன் தான், திருமணம் பற்றி யோசிக்க முடியும் என மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

உறவினர் என்பதால், காபி கொடுப்பதற்காக பால் வாங்க, அருகில் உள்ள கடைக்கு மாணவியின் தாய் சென்று வீடு திரும்பினார். அப்போது, 'எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது' எனக்கூறி, மாணவியை கத்தியால் ஜெயராமன் குத்தியுள்ளார்; கழுத்தையும் அறுத்துள்ளார்.இதைப் பார்த்த தாய் அலறினார். சம்பவ இடத்திலேயே மாணவி இறந்தார்.

இந்த சம்பவம் 2014 மார்ச்சில் நடந்தது. தப்பி ஓடிய ஜெயராமன், பின் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2018 டிசம்பரில் தீர்ப்பு அளித்தது. தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜரானார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும், அதனால், வெட்டு காயங்களை ஏற்படுத்தியதாகவும், ஜெயராமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க முடியாது. ஏனென்றால், 17 வயது சிறுமியின் உடலில், 32 வெட்டு காயங்கள் இருந்தன.இந்த அளவுக்கு ஜெயராமன் செல்வார் என்பதை, மாணவியின் பெற்றோர் நினைக்கவில்லை. அதனால் தான், காபி தயாரிக்க பால் வாங்க சென்றுள்ளார்.சாட்சியங்களை மறுக்க எந்த காரணங்களும் இல்லை. எனவே, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


போக்சோவில் இளைஞர் கைது


கோபால்பட்டி- செடிப்பட்டியை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூற, திண்டுக்கல் குழந்தைகள் நல அலுவலர் சியாமளா புகார்படி சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் திலகா ,பக்கத்து வீட்டை சேர்ந்த கூலி தொழிலாளி ஆண்டிச்சாமியை 26, போக்சோவில் கைது செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X