வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை-பிரத்யேக ரயில் பெட்டிகளுடன், 9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் 'மீண்டும் மஞ்சப்பை எஸ்க்ஸ்பிரஸ் ரயில்' வரும் டிசம்பரில் இயக்கப்படும்.
![]()
|
ரயில்வேயின் துணை நிறுவனமான, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யுடன் இணைந்து, 'மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி' என்ற திட்டம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம், 9 கோடி ரூபாய் மதிப்பில் 18 பிரத்யேக ரயில் பெட்டிகளுடன், 'மீண்டும் மஞ்சப்பை எஸ்க்பிரஸ்' கண்காட்சி ரயில் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 'மீண்டும் மஞ்சப்பை' எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த ரயிலை, ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க உள்ளது.
![]()
|
இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருப்பொருளாக வைத்து, பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும். பிரத்யேக வீடியோக்கள், புகைப்படங்கள், குறும்படங்கள் இடம்பெறும். இந்த ரயில், தமிழகம் முழுதும் செல்ல ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். வரும் டிசம்பர் முதல் வாரத்தில், மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement