வளர்ப்பு சிறுத்தையை மீட்க ஆந்திர டாக்டர் உருக்கம்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
லண்டன்-போர் நடந்து வரும் உக்ரைனில் இருக்கும் தன் வளர்ப்பு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை மீட்க உதவும்படி, மத்திய அரசுக்கு, ஆந்திராவை பூர்வீகமாக உடைய டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர் தற்போதும் நீடித்து வருகிறது.போர் துவங்கியபோது, உக்ரைனின் லுஹான்ஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்-போர் நடந்து வரும் உக்ரைனில் இருக்கும் தன் வளர்ப்பு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை மீட்க உதவும்படி, மத்திய அரசுக்கு, ஆந்திராவை பூர்வீகமாக உடைய டாக்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர் தற்போதும் நீடித்து வருகிறது.போர் துவங்கியபோது, உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர்.



அப்போது, டாக்டர் கிதிகுமார் பாட்டீல் என்பவர் மற்றொரு ஐரோப்பிய நாடான போலந்தில் தஞ்சமடைந்தார். ஆந்திராவின் மேற்கு கோதாவரியைச் சேர்ந்த இவர், உக்ரைனின் குடியுரிமையைப் பெற்று உள்ளார்.லுஹான்ஸ்க் நகரில் இருந்து வெளியேறும்போது, தன்னுடைய வளர்ப்பு பிராணிகளான சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையையும் உடன் அழைத்துச் செல்ல அவர் அனுமதி கேட்டார். ஆனால், அது மறுக்கப்பட்டது.



latest tamil news

இதையடுத்து, உக்ரைனைச் சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் இந்த சிறுத்தைகள் உள்ளன.செல்லப் பிராணிகளை பிரிந்ததால் மன ரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-அக்-202219:23:29 IST Report Abuse
வாய்மையே வெல்லும் உங்களுக்கு கவுலு பிராமணர் என்கிற போர்வையில் ஒளிந்து இருக்கும் உங்கஆட்களை தான் பிடிக்கும் என்பது எங்களுக்கு தெரியும் ( புரியும் ன்னு நினைக்கிறேன் ).. உங்களுக்கு உங்கபாணியில் பதில்சொன்னனால் தான் எங்களுக்கு திருப்தி ..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-அக்-202216:33:01 IST Report Abuse
DVRR இது எனக்கு வாட்சப்பில் மார்ச் மாதத்தில் வந்ததே???ஆக மொத்தம் இதை இந்த PETA கிட்டே கேட்கவேண்டியது தானே???அவர்கள் இதற்கு மிக மிக மிக அதிக உதவி செய்வார்களே????
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
06-அக்-202216:22:36 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan வன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தவறு என்று மெத்தப்படித்த இந்த உக்ரைன் மேதைக்கு தெரியாதோ? அவர் நாட்டு அதிபரிடம் கேட்காமல் இந்திய பிரதமரிடம் கேட்டு என்ன புண்ணியம்? அறிவு சுத்தமாக இல்லை என்பது தெளிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X