புதுச்சேரி : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களை சிறையில் அடையாளம் காட்டும் அணிவகுப்பு நடைபெற்றது.புதுச்சேரி, மோகன் நகரில் 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து விபாசாரத்தில் ஈடுபடுத்தி நாசமாக்கிய வழக்கில், வடலுார் புரோக்கர் பால்ராஜ், வாடிக்கையாளரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியிடம் 27 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான 5 பேரை போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், கைதான 23 பேரை உறுதிசெய்ய, காலாப்பட்டு சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். அதையடுத்து இவ்வழக்கில், அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேர், புதுச்சேரி நீதிமன்றம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.