பருவமழையை சமாளிக்குமா சென்னை? பணி முடியாத இடங்களில் ரெடிமேட் கால்வாய்| Dinamalar

பருவமழையை சமாளிக்குமா சென்னை? பணி முடியாத இடங்களில் 'ரெடிமேட்' கால்வாய்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (8) | |
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை மாநகராட்சி துவக்கி உள்ளது. அவசர தேவையாக, 34 இடங்களில், 'ரெடிமேட் கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளன. 700 இடங்கள் கண்டறியப்பட்டு, வெள்ள நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்தாண்டு பெய்த கனமழையால், சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை மாநகராட்சி துவக்கி உள்ளது. அவசர தேவையாக, 34 இடங்களில், 'ரெடிமேட் கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளன. 700 இடங்கள் கண்டறியப்பட்டு, வெள்ள நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



கடந்தாண்டு பெய்த கனமழையால், சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதைத்தொடர்ந்து, இவ்வாண்டு வெள்ளத்தை தவிர்க்கும் வகையில், முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. இதில், 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், வரும் 20ம் தேதிக்குள், இப்பணிகள் அனைத்தையும் முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகள் நிம்மதிபணிகள் முடிந்த வடிகால்களில் தண்ணீர் விட்டு சரிபார்க்கப்பட்டது. சமீபமாக பெய்து வரும் மழையால், வடிகால்களில் நீர் தேங்காமல் விரைவாக வடிவதால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொளத்துார் பகுதியில் 33 அடி நீளமுள்ள மழை நீர் வடிகாலை, 'ப்ரீகாஸ்ட்' என்ற 'ரெடிமேட் கான்கிரீட்' பயன்படுத்தி மாநகராட்சி 36 மணி நேரத்தில் அமைத்தது.தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், அவசர தேவையாக மழை நீர் வடிகால்களில் இணைப்பு வழங்கும் வகையில், 34 இடங்களில், 'ரெடிமேட் கான்கிரீட்' பயன்படுத்தி விரைந்து மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

அதிக கனமழை காரணமாக, வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, சுரங்கப்பாதைகளில் தலா இரண்டு மின் மோட்டார்கள் தாழ்வான இடங்கள், குடிசைவாழ் பகுதிகள் உள்ளிட்ட இடங்கள் என, மொத்தம் 700 இடங்களில் ராட்சத மின் மோட்டார்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



சாலை சீரமைப்புபருவமழை காரணமாக, இந்தாண்டில் டிச., 31ம் தேதி வரை சாலைகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக போடும் பணியை மாநகராட்சி நிறுத்தி உள்ளது. அதேநேரம், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், சாலைகளில் 'பேட்ச் வொர்க்' என்ற ஒட்டு போடும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.

கீழ்ப்பாக்கம் தோட்டச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில், மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் 'பேட்ச் வொர்க்' பணிகள் நேற்று நடந்தன. இதே போல, முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளாக, நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுஉள்ளன.வேளச்சேரி கால்வாய், ஆதம்பாக்கம் குளம் உள்ளிட்டவற்றில் உள்ள வண்டல்கள், ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டு, கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழை எதிர்கொள்வதற்கான பணிகளை, கவுன்சிலர்களுடன் இணைந்து மேற் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தாழ்வான 400 இடங்களில் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, மழை நீர் வடிகால் பணிகள் முடியாத இடங்களில், அந்தந்த ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மின் மோட்டார்கள் அமைக்கப்படுகின்றன. இதுதவிர, கூடுதலாக 300 மோட்டார்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும். சமூக நலக்கூடம், பள்ளிகள் போன்றவை நிவாரண முகாம்களாக பயன்படுத்த தயார் நிலையில் உள்ளன.


latest tamil news



இணையதளம்மாநகராட்சி மருத்துவமனைகளில் ஜெனரேட்டர், போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க 1913 என்ற எண்ணுடன், பிரத்யேக மொபைல் எண்கள் விரைவில் அறிவிக்கப்படும்.சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் மற்றும் புதிய வடிகால்களின் முழு விபரங்கள் அந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், https://chennaicorporation.gov.in/gcc/swd_net_maps என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த இணையதள பயன்பாட்டை பயன்படுத்தி, வடிகால்வாய்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


துறைகளை ஒருங்கிணைத்து



மொபைல் செயலி துவக்கம்மின் வாரியம், பொது பணித்துறை, காவல் துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விபரம், மொபைல் போன் எண்கள் அடங்கிய, 'மொபைல் செயலி'யை மாநகராட்சி துவக்கி உள்ளது.இந்த மொபைல் செயலி வாயிலாக, குறிப்பிட்ட வார்டில், எந்த துறை பணியாளர்கள், அதிகாரிகளின் சேவை வேண்டுமோ, அவர்களை மற்ற துறை அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில், அலுவலக பயன்பாட்டிற்காக மட்டும் 'மொபைல் செயலி'யை மாநகராட்சி துவக்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X