சுற்றுலாவை மேம்படுத்த என்.எல்.சி.,யுடன் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஒப்பந்தம்

Added : அக் 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுச்சேரி : சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், என்.எல்.சி.,யுடன் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராணன், துறை செயலர் அருண், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, என்.எல்.சி.,
சுற்றுலாவை மேம்படுத்த என்.எல்.சி.,யுடன் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஒப்பந்தம்

புதுச்சேரி : சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், என்.எல்.சி.,யுடன் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராணன், துறை செயலர் அருண், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் பாலாஜி, என்.எல்.சி., இயங்குனர் (சுரங்கம்) சுரேஷ்சந்திரசுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:என்.எல்.சி., நிறுவனம்,. இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைக்காக, ஒரு பகுதியை உருவாக்கி உள்ளது.அதன்படி, நெய்வேலியில் கல்வி, சுரங்கங்கள் பற்றிய ஆய்வு, சுற்றுச்சூழல் சுற்றுலா, சுரங்கத்திற்குப் பிந்தைய பகுதிகளின் புத்துயிர், படகு சவாரி, சிற்றுண்டிச்சாலை, சுரங்க அருங்காட்சியகம், மூடப்பட்ட சுரங்கங்களின் பாதுகாப்பான பகுதிகள், விளையாட்டு மண்டலங்கள், சாகுபடி திட்டுகள், காட்சிப் புள்ளி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முழு சுற்றுலா மண்டலம் என்.எல்.சி.,யால் உருவாக்கப்பட்டு உள்ளது.



இதில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம், என்.எல்.சி.,யின் சுற்றுலா விளம்பரத்திற்கான பிராண்டிங், விளம்பரம் மற்றும் முன்பதிவு அசோசியேட்டாக இருக்கும்.புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு இல்ல வளாகம் முழுவதும் இயற்கை அழகுடன் அமைக்கப்பட்டு, ஓராண்டு காலம் என்.எல்.சி.,யால் பராமரிக்கப்படும்.சுற்றுலா பயணங்களுக்கான கட்டணம், என்.எல்.சி.,க்கு வருகை தரும் ஒவ்வொரு குழுவிற்கும் நியமிக்கப்பட்ட கட்டணங்களின்படி புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்படும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மைன் டூரிசம், நெய்வேலிக்கு கல்வி சுற்றுலாப் பயணங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-அக்-202214:51:52 IST Report Abuse
Vijay D Ratnam புதுச்சேரி சுற்றுலா புதுச்சேரி சுற்றுலா என்று சொல்கிறார்கள். அப்படி புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அங்கு என்னதான் இருக்கிறது. ஆட்டோவில் ஒரு ரெண்டு மணி நேரத்தில் மொத்த புதுச்சேரியையும் பார்த்துவிடலாம். புஸ்ஸி ஸ்ட்ரீட், நேரு ஸ்ட்ரீட், அண்ணா சாலை, எம்.ஜி.ரோடு, காமராஜர் சாலை, என்.எஸ்.சி போஸ் ரோடு. இந்த ஆறு வீதிகள் வழியாக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு பொட்டானிக்கல் கார்டன், பீச்சை பார்த்தால் சுற்றுலா முடிந்தது. அதுக்கு மேல புதுச்சேரியில் பார்ப்பதற்கு என்ன இருக்குது. சந்துக்கு சந்து பார் இருக்குது, அங்கங்கு சாராயக்கடை இருக்குது. அவ்ளோதான். பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டிய கோவில், கோட்டை, கொத்தளம், அரண்மனை, மியூசியம் என்று ஒரு புண்ணாக்கும் இல்லை. பிராந்திக்கடை ஓனர்களும், சாராயக்கடைக்காரர்களும் தங்கள் பிஸ்னெசுக்காக புதுச்சேரி சுற்றுலா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் காரைக்கால் பகுதியிலும் டூரிஸ்ட்க்கு ஒன்றுமில்லை. காரைக்கால் துறைமுகம், திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் என்.ஐ.டி, ஜிப்மர், இதெல்லாம் டூரிஸ்ட்டில் வராதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X