தொழுகையின் போது பேச்சை நிறுத்திய அமித் ஷா!

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிக்கொண்டிருக்கையில், மசூதியில் தொழுகை நடக்க, அது முடியும் வரை, அமித் ஷா தனது பேச்சை நிறுத்தியது, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க
Amit Shah, Stops Speech,Azaan, Kashmir, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிக்கொண்டிருக்கையில், மசூதியில் தொழுகை நடக்க, அது முடியும் வரை, அமித் ஷா தனது பேச்சை நிறுத்தியது, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது.



ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார்.



வடக்கு காஷ்மீரின், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷவ்கத் அலி ஸ்டேடியத்தில் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கையில், அருகில் உள்ள மசூதியில் தொழுகை அழைப்புக்கான சத்தம் கேட்டது. உடனே பேச்சை நிறுத்திய அமித் ஷா, 'இது என்ன சத்தம்' என கேட்டார். மேடையில் இருந்தவர், 'மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடப்படுகிறது' என்றார்.


latest tamil news



உடனடியாக அமித் ஷா பேச்சை நிறுத்தினார். தொழுகை அழைப்பு முடியும் வரை அவர் மேடையில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அமித் ஷாவின் செயலுக்கு, அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆதரவு அளித்தனர். அழைப்பு முடிந்ததும், ''இப்போது நான் பேசலாமா,'' என கூட்டத்தை பார்த்து அமித் ஷா கேட்டார். 'பேசலாம்' என பதில் வந்ததும், அவர் பேச்சை தொடர்ந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-அக்-202217:57:21 IST Report Abuse
sankaseshan மஞ்சகாமாலை கண்ணனுக்கு எல்லாமே மஞ்சளாக தான் தெரியும்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
06-அக்-202216:44:23 IST Report Abuse
sankar நல்லா நடிக்கிறார் .
Rate this:
raja - ,
06-அக்-202221:42:42 IST Report Abuse
rajaநடித்தாலும் பிறர் இதை செய்வதில்லை...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-அக்-202215:44:17 IST Report Abuse
Vena Suna இது தான் இந்து கலாசாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X