மைசூரில் களைகட்டிய பத்து நாள் தசரா நிறைவு; தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி பவனி

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூரில், உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவின் பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று (அக்., 05) வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி தேவி, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டது. இம்முறை தொற்று பரவல் குறைந்துள்ளதால், விமரிசையாக
Mysuru, Dasara, Jamboo Savari, Vijayadashami

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூரில், உலக பிரசித்தி பெற்ற தசரா விழாவின் பிரதான நிகழ்வான, ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று (அக்., 05) வெகு விமரிசையாக நடந்தது. தங்க அம்பாரியில் பவனி வந்த சாமுண்டீஸ்வரி தேவி, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையான முறையில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டது. இம்முறை தொற்று பரவல் குறைந்துள்ளதால், விமரிசையாக கொண்டாடுவதாக, கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி, இம்முறை 413வது தசரா விழாவை, செப்டம்பர் 26ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். துவக்க நாள் முதல், நேற்று முன்தினம் வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் நடந்தன.



மன்னர் காலத்து பாரம்பரிய முறைப்படி, உடையார் வம்சத்தின் யதுவீர், வன்னி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். இதை பார்த்து மன்னர் காலத்து வைபோகம் மீண்டும் வந்தது போன்ற உணர்வு, பார்வையாளர்களுக்கு ஏற்பட்டது.அதன் பின், மதியம் 2:36 மணி முதல், 2:50 மணிக்குள் சுப மகர லக்னத்தில் அரண்மனையின் பலராமா நுழைவு பகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தி கொடிக்கு பூஜை செய்தார். இதன் மூலம் நாட்டுப்புற கலைகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆரம்பமானது.


latest tamil news



மாலை 5:36 மணிக்கு, 750 கிலோ உடைய தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, முதல்வர் பசவராஜ் பொம்மை, யதுவீர், மேயர் சிவகுமார், அமைச்சர்கள் சோமசேகர், சுனில்குமார் ஆகியோர் ஜம்பு சவாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அரண்மனையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள பன்னி மண்டபம் வரை ஊர்வலம் நடந்தது. வழி நெடுகிலும் இரு புறங்களிலும் மக்கள் வெள்ளம் போன்று நின்றிருந்தனர். இந்நிகழ்வுடன், மைசூரில் களைகட்டியிருந்த பத்து நாட்கள் தசரா விழா நிறைவுபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-அக்-202213:09:46 IST Report Abuse
Ramesh Sargam ஓம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியே போற்றி போற்றி போற்றி.
Rate this:
Cancel
Prakash Mahadevan - Thiruvallur,இந்தியா
06-அக்-202211:57:41 IST Report Abuse
Prakash Mahadevan தாயே சரணம்
Rate this:
Cancel
c k manikantan - Mysore,இந்தியா
06-அக்-202210:36:09 IST Report Abuse
c k manikantan சாமுண்டீஸ்வரி தேவி அல்ல சாமுண்டீஸ்வரி தாயி. மனதில் பக்தி இருந்தால்தான் இது எல்லாம் புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X