கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியினர் கொலைக்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில், துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 4 பேர் கொலை குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங்(39)
Kidnap, IndianOriginFamily,  Dead,  Orchard, US, அமெரிக்கா, இந்திய வம்சாவளி,  சடலம்,  மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்காவில், துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்ட 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் 4 பேர் கொலை குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(36), மனைவி ஜஸ்லீன் கவுர்(27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங்(39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் கடத்தி சென்றனர்.திங்கள் முதல், குடும்பத்தினரை காணவில்லை எனக்கூறப்பட்டாலும், தொழில் செய்யும் இடத்தில் இருந்து, துப்பாக்கி முனையில், அவர்கள் கடத்தி செல்லப்பட்டதாக போலீசார் கூறினர்.

இந்நிலையில், கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டி பகுதியில், பண்ணை தொழிலாளி ஒருவர், குழந்தை அரூஹி தேரி உடல் இருப்பதை முதலில் பார்த்துள்ளார். அதே பகுதியில், பெற்றோர் ஜஸ்லீன் கவுர் மற்றும் ஜஸ்தீப் சிங், உறவினர் அமன்தீப்சிங் உடலும் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அந்நாட்டு நேரப்படி நேற்று(அக்.,5) மாலை 5: 30 மணிக்கு அந்த தொழிலாளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அவர்களின் உடலை கைப்பற்றி, அந்த இடத்தில், தீவிரமாக சோதனை செய்தனர். அங்கு தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 48 வயதான நபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தான் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்த நிலையில், இன்னும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். போலீஸ் கஸ்டடியில் உள்ளவர் அளிக்கும் தகவல் அடிப்படையில், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் எப்படி கொலை செய்யப்பட்டனர் என்பதை போலீசார் கூறவில்லை. அவர்கள் திங்கட்கிழமைக்கு முன்னரே கொல்லப்பட்டிடருக்கலாம் என தெரிகிறது.


வீடியோ வெளியீடுஇதனிடையே, இந்திய வம்சாவளியினர் கடத்தி செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், காலை 8: 30 மணிக்கு ஜஸ்தீப் சிங், பணிபுரியும் இடத்தில் இருந்து வெளியே வருகிறார். சிறிது நேரத்தில் அமன்தீப் சிங் வந்துள்ளார்.


latest tamil news
பிறகு 9 மணியளவில், ஜஸ்தீப் சிங், ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது அந்த நபர், தனது பையில் இருந்து ஆயுதங்களை எடுத்து காண்பிக்கிறார். சிறிது நேரம் கழித்து, இருவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில், டிரக் மூலம் கடத்தி செல்லப்பட்டனர். பிறகு 6 நிமிடங்கள் கழித்து அந்த டிரக் மீண்டும் அங்கு வந்து ஜஸ்லீன் கவுர் மற்றும் அவரது குழந்தையையும், டிரக்கில் ஏற்றி கடத்தி சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது.

கடத்தப்பட்டவர்களின் மொபைல் போன் சாலையில் கிடந்ததை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அப்போது, உறவினர் பேசிய போது விவசாயி பதிலளித்துள்ளார். அதன் மூலம் கடத்தல் தெரியவந்துள்ளது.


ஆக்ரோசம்கஸ்டடியில் உள்ள குற்றவாளி மிகவும் ஆக்ரோசமான நிலையில் காணப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரின் குடும்பத்தினர் போலீசாரை தொடர்பு கொண்டு, கடத்தல் சம்பவத்தில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிழமை காலை, கலிபோர்னியாவின் அட்வடர் என்ற இடத்தில், கடத்தப்பட்டவர்களின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை வைத்து ஆய்வு செய்ததில், குற்றவாளிக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கின்றனர்.

தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ள நபர் கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஆயுத கடத்தல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறை சென்று பிறகு 2015ல் பரோலில் வெளியே வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thameem - Chennai,இந்தியா
07-அக்-202215:18:10 IST Report Abuse
Thameem குற்றவாளிக்கு பரோல் விளைவு ஒரு குடும்பமே மரணம் இஸ்லாமிய தண்டனை சட்டமே மக்களை பாதுகாக்கும் என்று இதை உலகம் உணருமோ
Rate this:
Cancel
prakashc - chennai,இந்தியா
06-அக்-202213:48:49 IST Report Abuse
prakashc திருமா வைகோ அண்ட் ஆல் கோமகனாகோ வந்து கதரு. கூத்தாடி போலாப பூச்சி
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
06-அக்-202213:11:17 IST Report Abuse
Sureshkumar வெளிநாட்டு பிரஜைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய அமெரிக்கா
Rate this:
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-அக்-202211:43:29 IST Report Abuse
Yaro Oruvanஇதே இந்தியாவில் வெளிநாட்டவருக்கு நடந்திருந்தால் அனைத்து ஓநாய்களும் ஓலமிட்டு கூப்பாடு போட்டு இந்தியாவின் மதிப்பை கெடுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்திருப்பார்கள்.. அங்கே நடந்ததாதல் அது தனிப்பட்ட ஒருவரின் குற்றம்.. இங்க நடந்தா அத இந்தியா பாதுகாப்பான நாடு இல்லை மோடி அரசு மோசம்னு கண்டமேனிக்கு கூவுவானுவ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X