336 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாகன சோதனை: இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் காரைக்கால்- சீர்காழி
மதுபாட்டில், பறிமுதல், ஒருவர், காப்பு, மதுப்பானங்கள்

மயிலாடுதுறை: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் கடத்திவரப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.



வாகன சோதனை:


இந்நிலையில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் காரைக்கால்- சீர்காழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



கைது:


அப்போது அதிவேகமாக வந்த டாட்டா இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் மதுப்பானங்கள் இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மது பாட்டில்கள் மற்றும் மதுப்பானங்கள் பறிமுதல் செய்து, கார் டிரைவர் வீரமணியை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X