பாத யாத்திரையில் பங்கேற்ற சோனியா: தாயின் ஷூ லேஷ் கட்டிவிட்ட ராகுல்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
மைசூரு: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்தும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா கலந்து கொண்டார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை ராகுல் மேற்கொண்டு வருகிறார். 5 மாதங்கள் நடக்கும் இந்த யாத்திரையானது 12 மாநிலங்களை கடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை துவக்கிய ராகுல், கேரளாவில்
congress, rahul, rahul gandhi, sonia, sonia gandhi,  bharat joda yatra, karnataka, congress chief sonia, congress chief sonia gandhi, congress mp rahul, congress mp rahul gandhi, காங்கிரஸ், ராகுல், பாரத் ஜோடோ யாத்திரை, ராகுல் காந்தி, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல்,  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடகா,

மைசூரு: காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்தும் 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா கலந்து கொண்டார்.


latest tamil newsகன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை ராகுல் மேற்கொண்டு வருகிறார். 5 மாதங்கள் நடக்கும் இந்த யாத்திரையானது 12 மாநிலங்களை கடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை துவக்கிய ராகுல், கேரளாவில் பயணித்து, கர்நாடகாவிற்குள் கடந்த 30ம் தேதி வந்தார்.


latest tamil news


Advertisement


இங்கு மட்டும் 21 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தினமும் சராசரியாக 25 கி.மீ., தொலைவு ராகுல் உள்ளிட்டோர் நடந்து செல்கின்றனர்.


latest tamil newsகர்நாடகாவில் தசரா கொண்டாட்டத்தை முன்னிட்டு 2 நாட்கள் யாத்திரை நடக்கவில்லை.இந்நிலையில் யாத்திரையின் 29வது நாளான இன்று காலை மைசூருவில் இருந்து துவங்கியது. ராகுலுடன் அக்கட்சியின் நிர்வாகிகள் ஜெய்ராம் ரமேஷ், மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான ஷிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சோனியா பங்கேற்புlatest tamil newsஇந்த யாத்திரையில், சோனியாவும் கலந்து கொண்டு நடந்து சென்றார். இதற்காக கடந்த திங்கட்கிழமை மைசூரு வந்த சோனியா, நேற்று பெகூர் கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


latest tamil newsதொடர்ந்து இன்று பாத யாத்திரையில் பங்கேற்ற சோனியா சில கி.மீ., தூரம் நடந்து வந்தார். ஆனால், தொடர்ந்து நடக்க அனுமதிக்காத ராகுல், காரில் வரும்படி கூறினார். தொடர்ந்து சோனியாவை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு ராகுல் நடைபயணமாக வந்தார். தொடர்ந்து நடப்பதாக சோனியா கூறியும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ராகுல் அதனை ஏற்கவில்லை. சோனியாவின் வருகை, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil newsஷிவக்குமார் கூறுகையில், தெருக்களில் சோனியா நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயதசமிக்கு பிறகு, கர்நாடகாவில் காங்கிரசுக்கு வெற்றி கிட்டும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.பா.ஜ., வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.


ஷூ லேசை கட்டிவிட்ட ராகுல்
latest tamil newsஇந்த யாத்திரையில் பங்கேற்ற சோனியா சில கி.மீ.,தூரம் நடந்தார். அப்போது, சோனியாவின் ஷூ லேஸ் கழன்றது. இதனை பார்த்த ராகுல், உடனடியாக அதனை கட்டிவிட்டார். அருகில் இருந்தவர்கள் இதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-202207:37:46 IST Report Abuse
Jai அம்மாவும் பயனும் குடும்பத்துடன் பாத யாத்திரை, கட்சி தலைவர் தேர்தல் நடக்கும்போது. இது உண்மையான தேர்தலாக இருந்தால் கட்சி தலைவர்கள் வந்துதான் இது போன்ற யாத்திதிரைகள் செல்ல வேண்டும்? கட்சி தேர்தல் எல்லாம் வெறும் நாடகம்தானா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-அக்-202223:20:07 IST Report Abuse
Ramesh Sargam கடந்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வொவொருவராக கட்சியிலிருந்து கழன்று செல்கிறார்கள். இப்ப பாவம் அந்த அம்மாவின் ஷூ லேஸ் கூட கழன்று போகிறது.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-அக்-202219:28:24 IST Report Abuse
வாய்மையே வெல்லும் எவ்வளவு பேருக்கு நம்ம பாண்டிசேரி நாராயணசாமி ராவுல் வின்சி வருகையின் போது மழைநாளில் அவரின் பாதரக்ஷை தலையில் சுமந்து போனது நினைவுக்கு வருது ? கைய தூக்குங்க பார்க்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X