உணவு ஒவ்வாமை: மூன்று சிறுவர்கள் பலி

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த செந்தில்நாதன் (70) என்பவர் இந்த சேவாலயத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த சேவாலயத்தில் தற்போது 15 ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிறுவன் சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் 14 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு
Tirupur, Food, Allergies, திருப்பூர், உணவு, ஒவ்வாமை, உணவு, ஒவ்வாமை,  உணவு ஒவ்வாமை, Food Allergies,

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த செந்தில்நாதன் (70) என்பவர் இந்த சேவாலயத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த சேவாலயத்தில் தற்போது 15 ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு சிறுவன் சொந்த ஊருக்கு சென்றிருப்பதால் 14 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று(அக்.,06) காலை உணவு ஒவ்வாமையால் குழந்தைகள் 14 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து சேவாலய வார்டன், காவலர் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை உடனடியாக மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். இரண்டு சிறுவர்கள் சேவாலயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுவன் திருப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். 11 சிறுவர்களும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்போலீசார் சேவாலயத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சேவாலயம் முன்பு திறண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.latest tamil newsஇதனிடையே, கவுதம்(9), சதீஷ்(9), தர்னிஸ், சபரி(8), குணா(7), ரித்திஸ்(8), ஹர்ஷத்(9), கவின் குமார் (12) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதேஷ் (14), பாபு(10), அத்தீஷ் (11) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.சிறுவர்கள் என்ன உணவு சாப்பிட்டனர், எப்போது அவர்களுக்கு இந்த ஒவ்வாமையினால் உடல்நிலை பாதித்தது என்பது குறித்து போலீசார், சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். உணவு ஒவ்வாமையால் மூன்று சிறுவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சம்பவ இடத்தில் ஆய்வு செய்த திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கூறியதாவது: திருப்பூரில் உள்ள சேவலாயத்தில், 15 பேர் உள்ளனர். ஒரு மாணவன் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு உணவுக்குப் பின், மூன்று பேர் இறந்தனர். நேற்று மதியம், ரசம் சாதம் சாப்பிடும் போதே குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இரவு 'டோலோ' மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உட்கொண்ட ரசம், சாதம், தண்ணீர் ஆகியவை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுள்ளது. 'டோலோ' மாத்திரை பாதி அளவு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆம் தேதி இரவு சுண்டல், இனிப்பு (லட்டு) சேவலாயத்திற்கு வெளியே இருந்து வந்த உணவுகள், வழங்கப்பட்டுள்ளது நேற்று காலையிலும் இனிப்பு(லட்டு) குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 174(3) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202204:43:59 IST Report Abuse
NicoleThomson மிகவும் வருத்தமான செய்தி இது
Rate this:
Cancel
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
06-அக்-202220:17:08 IST Report Abuse
shakti லட்டு எதாவது அமைதி மூர்கத்தினர் கடையிலிருந்து வந்ததா என்று விசாரிக்கவும்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
07-அக்-202209:41:58 IST Report Abuse
Rajaநீங்கள் விசாரிச்சு அறிக்கை கொடுங்க ஆபிசர் ....
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
06-அக்-202219:49:53 IST Report Abuse
மண்டகசாயம் ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X