ஆரம்பமே கண்ணக் கட்டுதே...!:சந்திரசேகர ராவ் கட்சியில் விரிசலா?: மகள் புறக்கணிப்பால் யூகம்!

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி என்ற கட்சியின் பெயரை, அக்கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரீய சமிதி என மாற்றினார். இந்த விழாவில் அவரது மகளும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கவிதா பங்கேற்காததும், இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் குழுவில் அவர் இடம்பெறாததும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. அக்கட்சியில் விரிசல்
TRS, KCR, daughter, Kavitha, absence, party launch questions, சந்திரசேகர ராவ், கவிதா, பிஆர்எஸ், டிஆர்எஸ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஐதராபாத்: தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி என்ற கட்சியின் பெயரை, அக்கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ரீய சமிதி என மாற்றினார்.


இந்த விழாவில் அவரது மகளும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கவிதா பங்கேற்காததும், இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் குழுவில் அவர் இடம்பெறாததும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. அக்கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.



கட்சி பெயர் மாற்றும் நிகழ்ச்சிக்கு முன்னதாக, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற நிலையில் கவிதா மட்டும் பங்கேற்காமல், வீட்டில் தசரா பண்டியை கொண்டாட்டத்தில் இருந்தார். மேலும், பெயர் மாற்றம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலும் கவிதாவின் பெயர் இல்லை. இதுவும் பலருக்கு கேள்வியை எழுப்பியது.



latest tamil news


இது போதாது என, மனுகோடா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அதிலும் கவிதாவின் பெயர் இல்லை. அதேநேரத்தில் பிஆர்எஸ் கட்சி என பெயர் மாற்றப்பட்ட விழாவில் கேடிஆர் கலந்து கொண்டார். இதனால், பிஆர்எஸ் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
06-அக்-202221:15:43 IST Report Abuse
Bhaskaran காங்கிரசை தனிமைப்படுத்தி வாக்குக்ளைசிதறடிக்கும் திட்டத்துக்கு ராவ் குருமாசாமி ஏற்பாடு இது தெரியாமல் நம் ஊர் குருமா இந்த மீட்டிங்கில் கலந்துகொண்டுமுழங்கியிருக்காரு
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06-அக்-202220:41:24 IST Report Abuse
sankaranarayanan கவிதாவின் பெயர் இல்லை என்றும் யாரும் கவலைப்பட வேண்டாம் அவர் சீக்கிறமே கவிதா என்ற பெயரை மாற்றி காவி-க்கு தா-விவிட்டார் என்று வரும்.
Rate this:
Cancel
06-அக்-202220:01:25 IST Report Abuse
ஆரூர் ரங் கவிதா ஒதுக்கப்பட்டதால் தான் சமீப சட்டசபை இடைத்தேர்தலில் பிஜெபி😛 வென்றது. இப்போது சந்திரசேகர் ராவ் க்கு தேய்பிறை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X