'உலகில் வாழும் மிகவும் வயதான நாய் 'என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பெப்பிள்ஸ் தனது 22வது வயதில், இயற்கையாக உயிர் பிரிந்தது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த தம்பதிகளான பாபி, ஜூலி கிரிகோரி , நியூயார்க்கில் கடந்த 2000ம் ஆண்டு மார்ச்.28ல் பிறந்த, நரி போன்ற தோற்றம் கொண்டசிறிய ரக நாய் ஒன்றை எடுத்து வளர்த்து வந்தனர். இதற்கு முன்னர் மிகவும் வயதான நாய் என அறியப்பட்ட 21 வயதான டோபி கீத் குறித்து சமீபத்தில் டிவியில் செய்திகள் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பலரும் குறுஞ்செய்தி வாயிலாக இதனை பகிர்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அதனை விட அதிக வயதுடைய பெப்பிள்ஸை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யக்கோரி ஜூலி விண்ணப்பித்துள்ளார். 'உலகில் வாழும் அதிக வயதுடைய நாய்' என கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெப்பிள்ஸ் இடம்பெற்றது.
![]()
|
ஜூலி கிரிகோரி கூறுகையில், பெப்பிள்ஸ் எங்களது வீட்டின் ராணி போல் வலம் வந்தது. ராக்கி என்ற ஆண் நாயுடன் இணைந்து 3 வெவ்வெறு காலங்களில், 32 குட்டிகளை போட்டது. வழக்கமாக பெப்பிள்ஸ், நாட்டுப்புற இசையை ரசித்து கேட்பதை மிகவும் விரும்பியது. புதிய உணவு வகைகளை எடுத்துகொள்வதை மிகவும் விரும்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது 23வது பிறந்தநாளை கொண்டாட இன்னமும் 5 மாதங்கள் இருந்த நிலையில், பெப்பிள்ஸ் அக்.,3ம் தேதி வீட்டில் இயற்கையாக உயிரிழந்தது அங்குள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.