சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் எஸ்.ஆர். சிவலிங்கம். இவர் முன்னாள் எம்.எல்.ஏ.,
தற்போது இவர் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இவர் கடந்த 3ம் தேதி இரவு அவரது பார்ச்சூனர் காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.
மறுநாள் சென்னை செல்ல காரில் ஏறி காரில் உள்ள டாஸ் போர்டை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்து இருந்த ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு , டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ரொக்கம் 3 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமி களை தேடி வருகிறனர்.