‛‛தமிழின் அடையாளங்களை மறைத்தால் எதிர்த்து குரல் கொடுக்கணும்'': கவர்னர் தமிழிசை பேச்சு

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (18+ 29) | |
Advertisement
கோவை: தமிழுக்கென உள்ள அடையாளங்களை மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே
Governor,Tamilisai,Soundararajan, ஆளுநர், கவர்னர், தமிழிசை, சௌந்தரராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: தமிழுக்கென உள்ள அடையாளங்களை மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை வந்தார்.


விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபட்டிருந்தது. பல துணை நிலை மாநிலங்களில் மின்சாரம் தனியார்மயமாக்கலால் மக்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது.


ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படையக் கூடாது.



latest tamil news



தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன். நெடுங்கலமாக தமிழகத்தின் கலாச்சரத்தின் அடையாளங்களை மறைக்கப் பார்க்கின்றனர். அது இனி முடியாது. தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம்.



தமிழர்களின் அடையாளம் இறைவழிபாடு. சிவனை கும்பிட்டார்கள். பெருமாளை கும்பிட்டார்கள். கோயிலை கட்டினார்கள். அவர்கள் கலாசாரத்தோடு வாழ்ந்தார்கள். சைவமும், வைணவமும் ஹிந்து மதத்தில் அடையாளங்கள் தான். அடையாளத்தை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது. ஹிந்து என்பது கலாச்சாரத்தின் அடையாளம். உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதை ஒத்துக் கொள்ள முடியாது இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
07-அக்-202201:18:44 IST Report Abuse
John Miller …..
Rate this:
Cancel
07-அக்-202200:09:33 IST Report Abuse
அஜய் இந்தியன் சோழர்கள் காலத்தில் ஆங்கிலேயர்கள் வந்து இந்தியாவை பிடித்து ஆண்டு இருந்தாலும்.....நமது தெய்வ வழிபாடு முறைக்கு ஹிந்து என்று தான் பெயர் வைத்து இருப்பார்கள். அதே போன்று ...ஆங்கிலேயர் வைத்த எத்தனையோ பெயர்களை நம் நாட்டில்.பயன் படுத்தி வருகிறோம். ஏன் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், Law and orders, Election systems and இன்னும் பல சட்ட வரை முறைகள் ஆங்கிலேயர் ஆட்சி இருந்ததை தான் இன்னும் நாம் கடை பிடித்து வருகிறோம். இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சில ஒப்பந்தம் செய்தது உள்ளோம் அதை இன்னும் நாம் கடை பிடித்து தான் வருகிறோம். இதை விடுங்கள்.... எலரை நாட்டு சனி திமுக விர்க்கும், VCK திருமாவளவனுக்கு, NTK சீமான்,MNM கமலுக்கும், Conmmunist, காங்கிரஸ் விருக்கும்....பிடித்து ஆட்டுகிறது....இந்திய முழுவதிலும் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் தொகை அதிகம். ஏன் தமிழ்நாட்டில் இந்து மத மக்கள் ஒன்று இன்னைந்தகள்.... எந்த திராவிட ஒன்னும் பண்ண முடியாது. இனி வாரும் தேர்தல் நேரத்தில் நம் இந்து மக்கள் என்ன செய்வார்கள் என்று ..இந்த திராவிட தெரிந்து கொள்வார்கள். தெரிந்து கொள்ள வைப்போம்.
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
06-அக்-202219:39:43 IST Report Abuse
மண்டகசாயம் ,மறைமுகமாக பாஜகவினரை தாக்கி பேசுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X