வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: தமிழுக்கென உள்ள அடையாளங்களை மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.
கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபட்டிருந்தது. பல துணை நிலை மாநிலங்களில் மின்சாரம் தனியார்மயமாக்கலால் மக்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது.
ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படையக் கூடாது.

தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன். நெடுங்கலமாக தமிழகத்தின் கலாச்சரத்தின் அடையாளங்களை மறைக்கப் பார்க்கின்றனர். அது இனி முடியாது. தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம்.
தமிழர்களின் அடையாளம் இறைவழிபாடு. சிவனை கும்பிட்டார்கள். பெருமாளை கும்பிட்டார்கள். கோயிலை கட்டினார்கள். அவர்கள் கலாசாரத்தோடு வாழ்ந்தார்கள். சைவமும், வைணவமும் ஹிந்து மதத்தில் அடையாளங்கள் தான். அடையாளத்தை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது. ஹிந்து என்பது கலாச்சாரத்தின் அடையாளம். உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதை ஒத்துக் கொள்ள முடியாது இவ்வாறு, அவர் கூறினார்.