மதுரை: ''தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திருமாவளவன் போன்றோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக 15 மாநிலங்களில் சோதனை செய்து, தக்க ஆதாரங்களுடன் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை தடை செய்துள்ளது மத்திய அரசு.இவ்வாறு சட்டப்படி தடை செய்த அமைப்புக்கு ஆதரவாக பேசுவது கிரிமினல் குற்றம். எனவே வி.சி., தலைவர் திருமாவளவன் அக்.,12ல் நடத்த உள்ள மனிதசங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது.
அவர் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக உள்ளார். அவர் பேசியதற்கு ஆதாரம் உள்ளதால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜராஜ சோழன் ஹிந்து இல்லை என சினிமா இயக்குனர் வெற்றி மாறன் கூறுகிறார். அப்படியானால் அவர் கட்டிய சர்ச், மசூதிகள் எங்கே உள்ளன? இவ்வாறு அவர் பேசினார்.