வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம். 5ஜிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ளது.