பங்குச்சந்தையில் ரூ.80 லட்சம் இழந்தவர் இன்று வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனர்!

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
2008ல் உலகப் பங்குச்சந்தைகள் நிதி நெருக்கடியில் சிக்கி சரிவைச் சந்தித்த சமயத்தில் ரூ.80 லட்சத்தை இழந்தவர் அஜய் லகோடியா. சந்தையை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதிக வருமானமீட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு சூடுபோட்டுக் கொண்டார். தற்போது அதே பங்குச்சந்தை தொடர்பான ஸ்டாக்க்ரோ (StockGro) ஸ்டார்ட்அப்பை வெற்றிகரமாக நிறுவி உள்ளார். பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த ஸ்டார்ட்அப்
Startup, ஸ்டார்ட்அப், Stockmarket, investment, savings

2008ல் உலகப் பங்குச்சந்தைகள் நிதி நெருக்கடியில் சிக்கி சரிவைச் சந்தித்த சமயத்தில் ரூ.80 லட்சத்தை இழந்தவர் அஜய் லகோடியா. சந்தையை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதிக வருமானமீட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு சூடுபோட்டுக் கொண்டார். தற்போது அதே பங்குச்சந்தை தொடர்பான ஸ்டாக்க்ரோ (StockGro) ஸ்டார்ட்அப்பை வெற்றிகரமாக நிறுவி உள்ளார்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஜனவரி 2020ல் தொடங்கப்பட்டது. இரண்டு மாதங்களில் கோவிட் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து நாடே ஊரடங்கு நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் வந்த மாதங்கள் பங்குச்சந்தைக்கு முக்கிய மாதங்களாக அமைந்தன. பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் இந்தியர்களிடையே அதிகரித்தது. அதனால் ஸ்டாக்க்ரோ நிறுவனமும் வளர்ச்சிக் காண துவங்கியது. தனது நஷ்டத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இந்நிறுவனத்திற்கான ஐடியாவைப் பெற்றார் அஜய் லகோடியா.


latest tamil news


ஸ்டாக்க்ரோ என்பது சமூக வலைதளம் போன்று சமூக முதலீட்டு களம். இதில் பயனர்கள் ஒவ்வொரு பங்கு முதலீடுகள் மற்றும் வர்த்தக உத்திகள் பற்றிய உரையாடல்களை நிகழ்த்தலாம். இதில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை லாபகரமாக மேற்கொள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள முடியும். இளைஞர்களை குறிவைத்து இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. 1 கோடி டவுன்லோடுகளை பெற்றுள்ளது. தொடங்கப்பட்டதிலிருந்து மாதத்திற்கு 2 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது.


latest tamil news


தனது பயணம் குறித்து அஜய் லகோடியா கூறியதாவது: 2008ல் பங்குச் சந்தை சரிவில் நான் ரூ.80 லட்சத்துக்கு மேல் இழந்தேன். அது எனக்கு பாடமாக அமைந்தது. 2008க்கு முன் சந்தைகள் உயர்ந்துக் கொண்டிருந்தன. எப்.டி., வட்டி ஏழெட்டு சதவீதமாக இருந்த போதிலும் சந்தைகள் அதிக வருமானத்தை தந்தன. மாதத்திற்கு 2% வருமானம். ஆண்டுக்கு 24%. அதனால் அனைவரும் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கினர். முதலீடுகள் முழுக்க முழுக்க டிப்ஸ்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.


latest tamil news


பங்குச்சந்தை சரிந்த போது ​​சந்தை எவ்வாறு இயங்குகிறது, ஆய்வாளர்கள் ஒரு நிறுவனத்தின் செயல்திறனை எப்படி மதிப்பிடுகிறார்கள், எவ்வாறு பங்கு பரிந்துரைகளை செய்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. சந்தையிலிருந்து பயந்து வெளியேறுவதற்கு பதில், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக் கொள்ள முடிவு செய்து இழப்புகளை மீட்டெடுத்தேன். அது தான் ஸ்டாக்க்ரோ தொடங்க அடித்தளமாக அமைந்தது.


தனிநபர் நிதி நிர்வாகத்தைப் பொறுத்தவரை 20 வருட வேலைக்குப் பிறகு, உங்கள் முதலீடு உங்கள் வாழ்க்கை முறையை ஆதரிக்க போதுமான ஆண்டு வருமானத்தை வழங்க வேண்டும் என்பது பொதுவான விதி. வாழ்க்கையில் மிக ஆரம்பத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகம். வாழ்க்கை செலவுகள் குறைவாக இருக்கும். வயதாகும்போது மற்றும் குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும் போது, ரிஸ்க் எடுப்பது குறைகிறது.

பணத்தை நிர்வகிக்க நான் மந்திரமாக நினைப்பது 3 விஷயங்களை தான். வருமானத்தில் 50 சதவீதம் செலவுகளுக்கு, 20 சதவீதம் வைப்புத் தொகைக்கு, 30 சதவீதம் பங்குகள் அல்லது மியூட்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு. சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கக் கூடிய தயாரிப்புகளில் ஒருவர் முதலீடு செய்ய வேண்டும்.நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற துறைகள்!


latest tamil news


நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உதாரணமாக சோப்பு, பற்பசை, சமையல் எண்ணெய் போன்ற தொழில்களில் முதலீடு செய்யலாம். இவை அழிய வாய்ப்பில்லை. தொடர்ந்து டிவிடென்ட் அளிக்கும்.

ஆட்டோமொபைல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் எதிர்காலத்தில் செழிப்பாக வளரும்.

வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறைகளும் வளர்ச்சியடையும்.

முடிவுகள் அறிவிக்கப்படும் போது குறைந்த ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கும் நல்ல டிவிடெண்ட் செலுத்தும் பங்குகளைத் தேர்ந்தெடுக்கலாம்.


குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்


குறுகிய கால முதலீடுகளுக்கு, நிறுவனம் அல்லது துறையில் தற்போதைய முன்னேற்றங்கள் காரணமாக உயர வாய்ப்புள்ள மொமன்டம் பங்குகளை தேர்ந்தெடுக்கவும். ஸ்டாப் லாஸ் உடன் அத்தகைய பங்குகளை 7 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக, தேசிய லாஜிஸ்டிக் கொள்கை அத்துறையை மாற்றியமைக்கும், ஏராளமான சலுகைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி உயர்தொழில்நுட்ப லாஜிஸ்டிக் நிறுவனங்கள் மிகவும் பயனடையும். இதனால் அவற்றின் பங்கு விலைகள் உயரும். நீங்கள் லாபகரமாக குறுகிய கால முதலீடுகளை மேற்கொள்ள 2% ஸ்டாப்லாஸை வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X