'30 சதவீதம் தள்ளுபடி குடுங்க': பேரம் பேசும் எலான் மஸ்க்..!

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டிவிட்டரை வாங்குவதற்கு, ஒப்புகொண்ட தொகையில் இருந்து 30 சதவீதம் தள்ளுபடி கேட்டு, எலான் மஸ்க் பேரம் பேசி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், கடந்த ஏப்ரலில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, போலி கணக்கு தொடர்பாக உரிய தரவுகளை அளிக்கவில்லை என வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார்.
America, Elon Musk, Twitter, எலான் மஸ்க்,  டிவிட்டர், அமெரிக்கா,  Discount, பணக்காரர்,டெஸ்லா, Rich, Tesla, எலான் மஸ்க் ட்விட்டர், Elon Musk Twitter,


டிவிட்டரை வாங்குவதற்கு, ஒப்புகொண்ட தொகையில் இருந்து 30 சதவீதம் தள்ளுபடி கேட்டு, எலான் மஸ்க் பேரம் பேசி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், கடந்த ஏப்ரலில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, போலி கணக்கு தொடர்பாக உரிய தரவுகளை அளிக்கவில்லை என வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். இதனை எதிர்த்து டிவிட்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் வெற்றி பெற முகாந்திரம் குறைவாக இருப்பதாக கூறப்பட்டது.


கடந்த அக்டோபர் 4ம் தேதி மஸ்க், அமெரிக்க பங்குச்சந்தை அமைப்பிடம், 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக மஸ்க், மீண்டும் அறிவித்தார். டிவிட்டர் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தி இருந்தது. ஒரு பங்குக்கு 54.20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,447) என்ற வகையில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதே நோக்கமென டிவிட்டர் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.



latest tamil news


இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த சில வாரங்களாகவே எலான் மஸ்க் தரப்பினர், டிவிட்டர் பிரதிநிதிகளுடன், ஒப்பந்த விலை குறித்து தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மஸ்க் தரப்பினர், முன்னர் உறுதி செய்யப்பட்ட ஒப்பந்த விலையில் இருந்து, 30 சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி, கேட்டு வருகின்றனர். இதன் மதிப்பு, 31 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.


இதனை டிவிட்டர் தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து 10 சதவீத தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், மஸ்க், கடந்த ஏப்ரலில் உறுதியளித்தப்படி, டிவிட்டர் பங்கு ஒன்றை 54.20 டாலருக்கு வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதிநிதிகள், இது குறித்து பதிலளிக்கவில்லை. இதனிடையே எலான் மஸ்க் தனது சமீபத்திய டிவிட்டர் பதிவில், 'நீண்ட காலமாக விவாதிக்கப்பட்ட அனைத்து செயல்களை ஒருங்கிணைக்கும் எக்ஸ்-ஐ உருவாக்குவதை, இந்த ஒப்பந்தம் துரிதப்படுத்தும்.' என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202205:51:18 IST Report Abuse
Kasimani Baskaran பிட் காயினை தரைமட்டத்துக்கு கொண்டு வந்த பாவத்துக்கு டிவீட்டரை வாங்கி நஷ்டமடைய வாய்ப்பிருக்கிறது...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-அக்-202202:20:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அஸ்க்கு புஸ்க்கு என்கிறார்கள் டுவிட்டர் பங்கு வைத்திருப்பவர்கள். டுவிட்டர் பங்கு வைத்திருப்பவர்களுக்கு டெஸ்லா கார் வாங்கும் போது 30% தள்ளுபடி தருவீர்களா என்று கேட்கிறார்கள் ?? ஓகேவா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X