எங்க எம்.பி.யை காணோம்: போஸ்டர் ஒட்டிய பா.ஜ.வினர்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
அமிர்தசரஸ்: எங்க தொகுதி லோக்சபா எம்.பி.,யை காணவில்லை என பல்வேறு இடங்களில் பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருப்பவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோல், பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மகனான இவர். கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் , தொகுதி வளர்ச்சி தொடர்பான
 எம்பி, Pathankot, Punjab , Posters , காணோம், missing  BJP MP    போஸ்டர்,பாஜ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அமிர்தசரஸ்: எங்க தொகுதி லோக்சபா எம்.பி.,யை காணவில்லை என பல்வேறு இடங்களில் பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருப்பவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோல், பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மகனான இவர். கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் , தொகுதி வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்களே அதிருப்தி வெளியிட்டனர்.


இந்நிலையில் சன்னிதியோல் வீட்டு சுவர், ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையம், மற்றும் சில வாகனங்களின் பின்புறம் ''எங்க எம்.பி.யை காணோம், எங்கே இருக்கிறார்'' என்ற வாசகத்துடன் போஸ்டரை ஒட்டியுள்ளார். அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil newsஇது குறித்து பதன்கோட் நகரைச் சேர்ந்த பிரமுகர் கூறியது, தேர்தலில் வென்று எம்.பி.யானதோடு சரி, தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை, இத்தொகுதியில் தொழிற்சாலை கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தார். அது என்னாச்சுன்னு தெரியவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியையும் சரியாக பயன்படுத்தவில்லை. தொகுதி மக்கள் நலனில் அக்கறை காட்டமால் உள்ளார். இவர் ராஜினாமா செய்துவிட்டு போவது தான் நல்லது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202204:42:04 IST Report Abuse
J.V. Iyer இப்படிப்பட்டவர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஒரே ஒற்றுமை, இவர்கள் நடிகர்கள்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
06-அக்-202223:05:56 IST Report Abuse
r ravichandran மோடி 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு கொடுப்பேன் என்று சொன்னதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும். இங்கே 1) 1000 மகளிர் உரிமை தொகை 2) மின்சார கட்டணம் மாதம் ஒரு முறை 3) மாணவர் கல்வி கடன் தள்ளுபடி 4) பெட்ரோல் டீசல் விலை குறைப்பு 5) நீட் தேர்வு ரத்து 6) மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி 7) பால் விலை குறைப்பு 8) விவசாய பயிர் கடன் தள்ளுபடி 9) நகை கடன் தள்ளுபடி ( பாதி பேருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை) 10) வீடு தோறும் வைஃபை வசதி 11) காஸ் சிலிண்டர் மானியம் 100 வழங்கப்படும். 12) முதியோர் உதவி தொகை 2000 வழங்கப்படும். இவை மட்டுமல்ல, இப்படி இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்ற படவில்லை. இதற்கு போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டுமானால் மொத்த தமிழ் நாட்டிலும் ஒட்ட வேண்டும்.
Rate this:
rajan - erode,இந்தியா
07-அக்-202203:38:26 IST Report Abuse
rajan… .....
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-அக்-202222:52:59 IST Report Abuse
konanki மாதம் 1000 ரூபாய் எங்கே ஸ்டாலின் என்று போஸ்டர் ஓட்டுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X