கொப்பரை தேங்காய் கொள்முதலில் ஊழல் : நல்லசாமி

Added : அக் 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அரூர்: கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் ஊழல் நடப்பதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.தர்மபுரி மாவட்டம், அரூரில், இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 33 ஆண்டுகளாக கள்ளுக்கு உள்ள தடையை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை, 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால்,
கொப்பரை தேங்காய் கொள்முதலில் ஊழல் : நல்லசாமி

அரூர்: கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில் ஊழல் நடப்பதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

தர்மபுரி மாவட்டம், அரூரில், இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 33 ஆண்டுகளாக கள்ளுக்கு உள்ள தடையை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை, 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. காவிரி, தென்பெண்ணையாறு, பாலாறு ஆகியவற்றில் செல்லும் உபரி நீரை ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் தேவையற்ற இலவசங்களை வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றிற்கு, 105.90 ரூபாய் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், பெயரளவிற்கு கொப்பரை கொள்முதல் நடக்கிறது. இதில், ஒரு சதவீதம் கூட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதில்லை. மாறாக, வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், பெருமளவில் முறைகேடு மற்றும் ஊழல் நடக்கிறது.

ஓசி குறித்து பேசுவதற்கு அமைச்சர்களுக்கு தகுதி இல்லை. மக்கள் வரிப்பணத்தில் தான் அரசு நடக்கிறது. அவர்கள் பணத்தில் தான் அமைச்சர்கள் காரில் போகின்றனர். அவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-அக்-202206:35:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாநில அரசின் வரிப்பணத்தில் ஒன்யறி அரசு வெட்டி நாட்டாமை பண்ணக்கூடாதுன்னு சொன்னதை சேக்காம விட்டாங்க. 😄😄
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
07-அக்-202213:21:06 IST Report Abuse
MANI DELHIபெட்டியை வாங்கி விட்டபின் குறை சொல்ல முடியல இந்த இயக்கத்திற்கு . உடனே மடைமாற்றம். ஒன்றியம், குன்றியம் அப்படீன்னு... படத்தில் உள்ள அனைவரும் பல தூண்டி விட்ட போராட்டங்களில் அங்கம் வகித்தவர்கள். ஆகையால் உங்களின் முட்டு பத்தாது ........
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202220:44:44 IST Report Abuse
NicoleThomson கடைசி வரி பன்ச் சார் , ஓசி குறித்து பேச ஓசியில் உடம்பு வளர்க்கும் மன்னரின் அடிபொடிகளுக்கு எந்த உரிமையும் இல்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X