வில்- அம்பு சின்னம் எங்களுக்கு தான் : தேர்தல் ஆணையத்திற்கு ஷிண்டே கடிதம்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை : சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தலைமையிலான மற்றொரு சிவசேனா அணி உள்ளது. இதில் உண்மையான சிவசேனா யார் என்பது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்சியின் வில் -
சிவசேனா, சின்னம் , தேர்தல் ஆணையம் , ஷிண்டே  
 Give  Symbol, Eknath Shinde , Election Body,  By-Polls

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை : சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தலைமையிலான மற்றொரு சிவசேனா அணி உள்ளது. இதில் உண்மையான சிவசேனா யார் என்பது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கட்சியின் வில் - அம்பு சின்னத்தை கைப்பற்றுவதிலும் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.


latest tamil news



இந்நிலையில், மும்பை மாநகரின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவ., 3ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், ஆளும் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., தரப்பில் இருந்து முர்ஜி படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுஉள்ளார்.சிவசேனா தரப்பில், ருத்துஜா லாத்கே போட்டியிடுகிறார்.


இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் உண்மையான சிவசேனா நாங்கள் தான். வரப்போகும் இடைத்தேர்தலில் போட்டியிட ஏதுவாக கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான வில் அம்பு சின்னத்தை எங்களுத்தான் தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் ஷிண்டே கூறியுள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202217:06:42 IST Report Abuse
அப்புசாமி ஏக்நாத்துக்கு அம்பும், உத்தவுக்கு வில்லும் குடுங்க. ஒருத்தனுக்கும் உதவாம போகட்டும். நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
07-அக்-202210:05:52 IST Report Abuse
K.n. Dhasarathan தேர்தல் ஆணையம் என்று ஒன்று செயல் படுதா? ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுப்பதை வீடியோ ஆதாரம் கொடுத்தும் இதுவரை ஒன்றுமில்லை, இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஒரே இடைத்தேர்தல் தான் நடத்தினார் சாஹு, இப்போது தலைமை தேர்தல் அதிகாரி ஆகிவிட்டார்.அந்த நேரம் மக்கள் தேர்தல் சரிவர நடக்கலை என்று கேள்வி கேட்கையில் பதில் சரிவர சொல்ல முடியாமல் அவர் திணறியதை அனைத்து மக்கள் எல்லோரும் வேடிக்கையாக பார்த்தார்கள். அவர் பதவி உயர்வு எப்படி? அடுத்து மிக மிக முக்கியமானது, சரியான சொத்து விபரம், தேரிக்காத, அல்லது வேண்டுமென்றே தவறான தகவல் கொடுத்த வேட்பாளர்கள் மேல் ஏதும் நடவடிக்கை எடுத்தது உண்டா ? போயி உங்கள் வேலைகளை முதலில் சரிவரா செய்யுங்கள்.
Rate this:
Cancel
07-அக்-202205:55:26 IST Report Abuse
இவன் 😄, தேர்தல் commision பிஜேபி கைல னா 100 தனியா நின்னு ஜெயிக்க வேண்டி தானே ஏன் 50 கேட்கணும் 🤣🤣
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
07-அக்-202206:25:38 IST Report Abuse
vadiveluஇதை உன்னால் நிரூபிக்க முடியுமா? இதற்கே உன் மீது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ளி இருப்பார்கள் வேறு ஆட்சியாக இருந்தால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X