மத்திய அரசுத் திட்டத்தில் ரூ.1,000 கோடி கடன்: ஸ்பைஸ் ஜெட் பங்குகள் டேக் ஆஃப்!

Updated : அக் 07, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் (அக்., 06) 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன. இந்நிறுவனம் மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.1,000 கோடி கடன் பெற வாய்ப்புள்ளது என்ற தகவலால் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் டேக் ஆப் ஆகியுள்ளன.கோவிட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் விமான நிறுவனங்களும் ஒன்று. தற்போது
Spicejet, StockMarket, NSE, BSE, ஸ்பைஸ்ஜெட்

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் (அக்., 06) 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தன. இந்நிறுவனம் மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.1,000 கோடி கடன் பெற வாய்ப்புள்ளது என்ற தகவலால் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் டேக் ஆப் ஆகியுள்ளன.

கோவிட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் விமான நிறுவனங்களும் ஒன்று. தற்போது உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கோவிட்டுக்கு முந்தைய நிலையின் 90 சதவீதத்தை அடைந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் இது மேலும் மேம்படும் என்று சென்ட்ரம் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் பாதுகாப்பு தொடர்பான பல சம்பவங்கள் காரணமாக 50 சதவீதத்திற்கும் குறைவான விமானங்களையே இயக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது. அது அக்டோபர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ஏற்கனவே கடனில் உள்ள நிறுவனம் இந்த கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டதால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் கடந்த சில மாதங்களாக கடும் சரிவில் உள்ளன. ரூ.87.25 என்ற உயர்நிலையில் இருந்த ஒரு பங்கின் விலை 50 சதவீதத்திற்கு மேல் சரிந்து 40 ரூபாய்க்கு கீழ் சென்றது. இந்நிலையில் அரசாங்கத்தின் மாற்றியமைக்கப்பட்ட அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் ரூ. 1,000 கோடி கூடுதல் கடனைப் பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியானது. இதனால் வியாழனன்று பங்கு ஒன்றின் விலை 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ரூ.41.55 என்ற விலையில் முடிவடைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
07-அக்-202212:11:26 IST Report Abuse
Tamilan உலகமகா கொள்ளையர்களின் கண் இந்த நிறுவனத்தை விட்டு இனியும் விலகவில்லை . . மீடியாக்கள் மக்களிடம் இருந்து மறைக்கின்றன.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
07-அக்-202212:09:00 IST Report Abuse
Tamilan இதுவும் உதாரணம் .
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
07-அக்-202211:44:31 IST Report Abuse
பாமரன் ... 😪😪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X