மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் : அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி, :மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அஸ்வனி குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்
மூத்த குடிமக்கள், திட்டங்கள் ,அறிக்கை ,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி, :மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.



முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அஸ்வனி குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:நம் நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடுகின்றனர்.


latest tamil news



இருப்பிட வசதியின்றி திறந்தவெளிகளில் வசிக்கின்றனர்; உடுக்க உடைஇல்லை. எனவே, மூத்த குடிமக்களுக்காக நாடு முழுதும் போதிய சுகாதார கட்டமைப்பு வசதிகளுடன் காப்பகங்களை அமைக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.



இந்த மனு, நீதிபதிகள் அனிருந்தா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:மூத்த குடிமக்களுக்காக என்னென்ன நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன; எத்தனை முதியோர் காப்பகங்கள் உள்ளன என்பது பற்றிய விரிவான விபரங்களை, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202218:32:35 IST Report Abuse
அப்புசாமி பாருங்க... மத்திய அரசுக்கு நோட்டீஸ் இல்லை. மாநில, யூனியன் பிரதேசங்களுக்குத்தான் நோட்டீஸ். ரயில்வேதுறை மத்திய அரசின் கீழ் வருது. , இது கூட தெரியாம போச்சே...
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
07-அக்-202212:43:39 IST Report Abuse
Vaiyapuri Rajendran Mininum pension increase in EPFO is essential..
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
07-அக்-202212:42:48 IST Report Abuse
Vaiyapuri Rajendran வருங்கால வைப்பு நிதியை கொண்டு வழங்கப்பட்டு வரும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X