சசி தரூரைக் கண்டு தலைதெறிக்க ஓட்டம்!

Updated : அக் 08, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரை சந்திக்க மறுத்து, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டனர். சசி தரூருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களை தவிர, வேறு யாரும் பங்கேற்கவில்லை.காங்கிரஸ் தலைவர் தேர்தலில், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள்
காங்கிரஸ், தலைவர் ,வேட்பாளர், தமிழ்நாடு , சசி தரூர் ,

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரை சந்திக்க மறுத்து, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டனர். சசி தரூருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்களை தவிர, வேறு யாரும் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் ஆகிய இருவரும் மோதுகின்றனர். இருவரும் மாநில வாரியாக, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.அழைப்பு


தமிழகத்தில் ஓட்டு சேகரிப்பதற்காக, நேற்று சென்னை வரும் முன், சசிதரூர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'சத்தியமூர்த்தி பவனுக்கு கூட்டாளிகளும், நண்பர்களும் வர வேண்டும்; அங்கு சந்தித்து பேசுவோம்' என, அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி, நேற்று மாலை 3:00 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்த சசி தரூரை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தணிகாசலம், அருள் பெத்தையா, விஜயஇளஞ்செழியன், தி.நகர் ஸ்ரீராம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வரவேற்றனர். பின் அவர், சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ் சிலைக்கும், கிண்டி காமராஜர் நினைவகத்திலும் மரியாதை செலுத்தினார். அதன் பின், கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் சசி தரூர் பங்கேற்றார்.


எட்டிப் பார்க்கவில்லை


பின், அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு, சிதம்பரம் ஆதவாளர்கள் மட்டும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழக காங்கிரசில் உள்ள 18 எம்.எல்.ஏ.,க்களில், சிதம்பரம் ஆதரவாளர்கள் மூன்று பேர் மட்டும், தொலைபேசியில் சசி தரூரிடம் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடலுாரிலும், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஈரோட்டிலும் இருந்தனர். திருநாவுக்கரசர், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமியும் வெளியூர் சென்று விட்டனர்.


காங்கிரஸ் எம்.பி.,க்கள் செல்லகுமார், மாணிக்தாகூர், ஜோதிமணி, விஜய்வசந்த் உள்ளிட்ட எட்டு எம்.பி.,க்களும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. சசி தரூரின் தீவிர ஆதரவாளரான கார்த்தி சிதம்பரமும், வெளிநாட்டுக்கு சென்று விட்டார்; வரும் 10ம் தேதி தான் தாயகம் திரும்புகிறார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா, ராகுல் ஆதரவு மறைமுகமாக இருப்பதால், சசி தரூரை சந்திக்க பயந்து, தமிழக கோஷ்டி தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டனர்.தமிழக காங்., தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், சிதம்பரம் ஆதரவாளர்கள் மட்டுமே சசி தரூரை சந்தித்து பேசினர்; வேறு யாரும் அங்கு வரவில்லை. சிலர் ரகசியமாக, அவருடன் மொபைல் போனில் பேசி, வர முடியாததற்கான காரணத்தை கூறியுள்ளதாக தெரிகிறது. அனைத்து கோஷ்டி தலைவர்களிடமும் ஏற்கனவே ஒரு சுற்று, தொலைபேசி வாயிலாக சசி தரூர் ஆதரவு கேட்டுள்ளார். 'மற்றொரு முறையும் ஆதரவு கேட்பேன்' என, சசிதரூர் தெரிவித்துள்ளார்.ஆதரவு இல்லை


தமிழக காங்கிரசில் பெரிய அளவில் சசி தரூருக்கு ஆதரவு இல்லை என்றாலும், வட மாநில காங்கிரசாரிடம், 'ஆளுமையான நிர்வாகி' என்ற பெயர் உள்ளது. வயது முதிர்வு காரணமாக, கார்கேவை ஏற்க, வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. காங்., ஆளும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், சசி தரூருக்கு பெரும்பான்மை ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இருமுனை போட்டியில் கார்கேவுக்கு சசி தரூர், கடும் நெருக்கடி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
யார் வென்றாலும் மகிழ்ச்சி தான்: சசி தரூர்''ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது; இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி,'' என, சசி தரூர் கூறினார்.சென்னையில் அவரது பேட்டி: தமிழகத்தில் வரவேற்பு அளித்த காங்., நிர்வாகிகளுக்கு நன்றி. தமிழக காங்., தலைவரிடம் பேசினேன். கட்சியினரிடம் ஆதரவு கேட்பது குறித்து வழி நடத்தினார்.தலைவர் தேர்தலில் போட்டியிட தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். என்னுடன் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக, கட்சிக்காக உழைத்துள்ளார்.தேர்தல் வந்தால் அதில் போட்டி இருக்க வேண்டும். அதனால் தான் போட்டியிடுகிறேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. வெற்றி பெற்றவர்களுக்கு பின்னால் இருந்து, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதை பா.ஜ., வேறு மாதிரியாக திசை திருப்ப பார்க்கிறது; அதற்கு காங்., இடம் தராது.இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தினமும் காலை 6:00 மணிக்கு ராகுல் நடைபயணத்தை துவக்குகிறார். தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருடன் நடந்து செல்கின்றனர். இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறும்போது, கட்சியில் பெரிய எழுச்சி அடையும். அரசியல் திருப்பங்கள் உருவாகும். இது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தரும். பா.ஜ.,வின் தோல்விக்கு, காங்கிரசார் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., வலுவாக உள்ளது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
07-அக்-202221:27:03 IST Report Abuse
sankar தலை தெறிக்க ஓடினாங்களா? இப்படி மிகைப்படுத்தி போடுவது மூன்றாந்தரமானது
Rate this:
07-அக்-202222:22:04 IST Report Abuse
பேசும் தமிழன்உண்மையை தானே சொல்கிறார்.......சசி தரூர் வரும் போது... காணமல் போன அல்லகைகள் எல்லாம்..... அந்த கர்நாடக காரர் வரும் போது..... எங்கே போவார்கள்??? எல்லோரும் சொல்வது போல.... இது பப்பு மற்றும் அவரது மம்மி சேர்ந்து நடத்தும் நாடகம் போல் தெரிகிறது.... தேர்தல் நடக்க போகும் போது இந்த கூத்து... அது தாங்க பப்பு நடை பயிற்சி எதுக்கு.... தலைவராக யார் வெற்றி பெறுகிறார்கள்... அவர்கள் தானே நடக்க வேண்டும்???...
Rate this:
Cancel
07-அக்-202217:50:01 IST Report Abuse
எவர்கிங் கார்கே வின் தலைமை பதவி/ National Herald வழக்கை கொஞ்ச காலம், ஒத்தி வைக்க , வாய்தா வாங்க இழுத்தடிக்க எடுக்கப்பட்ட முடிவே சோதா பாடை யாத்திரை - ஃபெரோஸ் காந்தி ஜவஹர்லால் நேரு குடும்ப தலைமை இல்லாத தலைமை.... முடிவு...சீத்தாராம் கேசரி போல கார்கேயும் அடைக்கப்படுவது சத்தியம்.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
07-அக்-202217:25:34 IST Report Abuse
KavikumarRam என்னது ஒரு லட்சம் பேர் ராகுல் கூட நடக்குறாங்களா. என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க. மொத்தமா இந்தியாவிலேயே இவ்வளவு கூட்டம் கூடாதெடா. தலைவர் பதவிக்கே வரல அதுக்குள்ள இவ்ளோ பெரிய ரீலா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X