பூஸ்டர் தடுப்பூசி: தயக்கம் வேண்டாம்!

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : தடுப்பூசி, கொரோனா பரவலைத் தடுத்தது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை 15ம் தேதி மத்திய அரசு தொடங்கியது.தமிழகத்தில் தினமும் அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு மெகா முகாம்களிலும் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்திய
Booster Vaccine, Corona Virus, Vaccine, கொரோனா, பூஸ்டர், தடுப்பூசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : தடுப்பூசி, கொரோனா பரவலைத் தடுத்தது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை 15ம் தேதி மத்திய அரசு தொடங்கியது.



தமிழகத்தில் தினமும் அரசு மருத்துவமனைகளிலும், சிறப்பு மெகா முகாம்களிலும் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்திய அரசின் 75 நாட்கள் அவகாசம் செப்., 30 உடன் நிறைவடைந்தது. திருப்பூரில் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஓரளவுதான் வரவேற்பு இருந்தது.''இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறைவடைந்துள்ளது.



கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ளது. இனி புதன்கிழமைதோறும் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி உட்பட 13 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும்.



latest tamil news


வியாழக்கிழமைதோறும் 12 முதல் 17 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பூசிகள் பள்ளிகளில் போடப்படும். மற்றநாட்களில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்'' என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.



தொழில்துறையினர் கூறுகையில், ''தடுப்பூசி, கொரோனாவை காணாமல் போகச் செய்தது. தொழிலாளர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக, திருப்பூரில் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்க முடிகிறது. பூஸ்டர் தடுப்பூசியையும் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்'' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X