ஜனாதிபதி குறித்து சர்ச்சை பேச்சு : காங்., பிரமுகருக்கு கண்டனம்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி :ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் உதித் ராஜுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர், 'நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு மட்டும், 76 சதவீதம். இதன் வாயிலாக, நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர்
ஜனாதிபதி , சர்ச்சை , பேச்சு , காங்கிரஸ்,

புதுடில்லி :ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் பிரமுகர் உதித் ராஜுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர், 'நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத்தின் பங்கு மட்டும், 76 சதவீதம்.



இதன் வாயிலாக, நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குஜராத் உப்பை சாப்பிடுகின்றனர் எனக் கூறலாம்' என்றார்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான உதித் ராஜ், இதை கடுமையாக விமர்சித்திருந்தர். 'திரவுபதி முர்மு போன்ற ஜனாதிபதி, எந்த ஒரு நாட்டுக்கும் கிடைத்தது இல்லை. முகஸ்துதி பாடுவதற்கான உச்சத்தை கடந்து விட்டார். வாழ்க்கை முழுதும் உப்பை சாப்பிட்டு பாருங்கள்; அப்புறம் என்ன நடக்கிறது என தெரியும்' என தெரிவித்திருத்தார். உதித் ராஜின் இந்த கருத்துக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:பழங்குடியினரை அவமதிப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. காங்., லோக்சபா எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இப்படித் தான் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஏற்கனவே பேசினார்; அப்புறம் மன்னிப்பு கேட்டார். இப்போது உதித் ராஜ், ஜனாதிபதியையும், அவர் சார்ந்த பழங்குடியின மக்களையும் விமர்சித்துள்ளார். பழங்குடியினருக்கு எதிரான காங்கிரசின் மனப்போக்கு, இதன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ.,வின் மற்றொரு செய்தி தொடர்பாளர் செஜாத் பூன்வால்லா கூறுகையில், ''ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் பேசிய உதித் ராஜை, கட்சியிலிருந்து நீக்க காங்., மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து உதித் ராஜ் கூறுகையில், ''நான் தெரிவித்தது, என் சொந்த கருத்து; காங்கிரசுக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202218:47:59 IST Report Abuse
எவர்கிங் ஆமாம் உடனே தூக்குல‌போட்டுடுவாங்க...
Rate this:
Cancel
07-அக்-202212:18:58 IST Report Abuse
அப்புசாமி குடியரசு தலைவர் பொது மேடைகளில் இது மாதிரி பேச்சுக்களை தவிர்க்கணும்.
Rate this:
hari - ,
07-அக்-202218:51:32 IST Report Abuse
hariஅப்புசாமிக்கு உப்பு தேவையில்லை, அனைவர்க்கும் தெரிந்ததே...
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07-அக்-202211:46:21 IST Report Abuse
sankaranarayanan உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி காங்கிரசு தலைவர்கள் கொஞ்சம் உப்பை அதிகமா சாப்பிட்டுவிட்டதாலான விளைவுகள்தான் இது. இனி இவர்கள் வைத்தியர்களை அணுகி தகுந்த மாத்திரை சாப்பிடலாமே/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X