பஸ்சில் ஏறாமலே பயணம்... அசந்தால் மரணம்; வீடியோவைக்கண்ட போலீஸ் அதிர்ச்சி

Added : அக் 07, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கோவை : கோவை - அவிநாசி சாலையில், ஓடும் பஸ்சின் பின்புறம் ஏணியை பிடித்துக்கொண்டு, ஸ்கேட்டிங் சாசகம் செய்த வெளிநாட்டு வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை - அவிநாசி சாலையில், நேற்று முன்தினம் மாலை சென்ற வாகன ஓட்டிகள் பலரும், சாலையில் ஸ்கேட்டிங் செய்தபடி சென்ற வெளிநாட்டவரை பார்த்தனர். விமான நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை அவர், ஸ்கேட்டிங் செய்தபடியே
Viral Video, Coimbatore, skating,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : கோவை - அவிநாசி சாலையில், ஓடும் பஸ்சின் பின்புறம் ஏணியை பிடித்துக்கொண்டு, ஸ்கேட்டிங் சாசகம் செய்த வெளிநாட்டு வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை - அவிநாசி சாலையில், நேற்று முன்தினம் மாலை சென்ற வாகன ஓட்டிகள் பலரும், சாலையில் ஸ்கேட்டிங் செய்தபடி சென்ற வெளிநாட்டவரை பார்த்தனர். விமான நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை அவர், ஸ்கேட்டிங் செய்தபடியே வந்தார்.அப்போது அந்த வழியாக வந்த, அரசு பஸ்சை கண்ட அவர், அதன் பின்புறம் சென்று ஏணியை பிடித்துக் கொண்டார். இதனால் பஸ்சின் வேகத்துக்கு இணையாக, அவரும் ஸ்கேட்டிங்கில் சென்று கொண்டிருந்தார்.latest tamil news


பலரும் வேடிக்கை பார்ப்பதை கண்டதும், அவருக்கு உற்சாகம் அதிகரித்தது. பஸ்சின் இடது, வலது புறமாகவும், அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்தார்.பஸ்சை தொடாமல் கைகளை எடுத்துக் கொண்டும் சாகசம் செய்தார். இப்படியே ஹோப் காலேஜ் சிக்னல் வரை வந்தவர், அதன்பின் காரில் ஏறிச் சென்றார்.


latest tamil newsபின்தொடர்ந்து பைக்கில் சென்ற வாலிபர்கள், வெளிநாட்டவரின் ஸ்கேட்டிங் சாகசத்தை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பினர். வீடியோவை கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அந்த வெளிநாட்டவரை கண்டுபிடித்து, தக்க அறிவுரை கூறி அனுப்பி வைக்குமாறு, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-அக்-202213:04:27 IST Report Abuse
அசோக்ராஜ் த்ராவிஷ காக்கி பாவம் வீடியோ பார்த்தாலே அதிர்ச்சி அடைஞ்சிடுது. நேரில் பார்த்திருந்தா மாரடைப்பு வந்து செத்துப் போயிருக்கும். காந்தி படம் காட்டுனா உயிர் வந்துடும்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
07-அக்-202211:59:23 IST Report Abuse
ram விசாரித்தால், சிறுபான்மை வோட்டு கிடைக்காது
Rate this:
Cancel
Just imagine - chennai,சீனா
07-அக்-202209:59:30 IST Report Abuse
Just imagine ஓசி .... ஓசி.
Rate this:
Ram - ottawa,கனடா
07-அக்-202212:29:20 IST Report Abuse
Ramஇதைத்தான் பொன்முடி ஓசி என்று சொன்னாரோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X