சி.பி.ஐ., அதிரடி சோதனையில் 26 'சைபர்' குற்றவாளிகள் கைது

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி-'சைபர்' குற்றத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., நடத்தியஅதிரடி சோதனையில்,நாடு முழுதும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ., நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:'சைபர் கிரைம்' எனப்படும் இணைய வழி குற்றங்களுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சக்கரா' என்ற பெயரில் ஒருங்கிணைந்த அதிரடி சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது.'இன்டர்போல்'

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-'சைபர்' குற்றத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., நடத்தியஅதிரடி சோதனையில்,நாடு முழுதும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news



சி.பி.ஐ., நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:'சைபர் கிரைம்' எனப்படும் இணைய வழி குற்றங்களுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சக்கரா' என்ற பெயரில் ஒருங்கிணைந்த அதிரடி சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது.'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் மற்றும் பல நாடுகளின் உளவு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், மாநில அரசுகளுடன் இணைந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், நாடு முழுதும் 87 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகளும், 28 இடங்களில் மாநில போலீசாரும் ஈடுபட்டனர். இதில், 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில், 16, புதுடில்லியில் ஏழு, பஞ்சாபில் இரண்டு, அந்தமான் மற்றும் நிகோபரில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


latest tamil news




இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்டதாக, 11 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்த சோதனைகளின் வாயிலாக, சர்வதேச அளவில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
07-அக்-202212:00:42 IST Report Abuse
Tamilan .......
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202209:36:33 IST Report Abuse
duruvasar இது 4 நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் எந்தவகையான ஊடகங்களும் இதை ஒரு செய்தியாக கூட கருதவில்லை‌ . தமிழன் இந்துவா என்ற ஆராய்ச்சி தான் எங்கள் கவலை. எந்த மொழியை படிக்கவேண்டும், எந்த செய்தியை தெரிவிக்கவேண்டும் என்ற கட்டளைப்படி தான் இங்கு செயல்பாடுகள் உள்ளன‌
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
07-அக்-202202:01:06 IST Report Abuse
John Miller இந்த மாதிரியான ஏமாற்று கம்பெனிகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X