ரூ.27 கோடி கைக்கடிகாரம் பிடிபட்டது: அதிர்ந்து போன சுங்க அதிகாரிகள்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி-துபாயில் இருந்து புதுடில்லி வந்த விமான பயணியிடம் இருந்து, 27 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, அவரை கைது செய்தனர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லி விமான நிலையம் வந்த பயணியரிடம் நேற்று சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் ஏழு உயர் ரக கைக்கடிகாரங்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-துபாயில் இருந்து புதுடில்லி வந்த விமான பயணியிடம் இருந்து, 27 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.




latest tamil news


மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லி விமான நிலையம் வந்த பயணியரிடம் நேற்று சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் ஏழு உயர் ரக கைக்கடிகாரங்கள், வைர 'பிரேஸ்லெட்' மற்றும் 'ஐ - போன் 14 ப்ரோ மொபைல் போன்' ஆகியவை கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



இதில், ஒரு 'பியாகெட் லைம்லைட் ஸ்டெல்லா' மற்றும் ஐந்து 'ரோலக்ஸ்' கைக்கடிகாரங்கள் இருந்தன. பியாகெட் கைக்கடிகாரம் 31 லட்சம் ரூபாய் மதிப்பும், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் தலா 15 லட்சம் ரூபாய் மதிப்பும் உடையவை.இவை தவிர, அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தங்க நகை மற்றும் கைக்கடிகார வடிவமைப்பு நிறுவனமான, 'ஜேக்கப் அண்டு கம்பெனி' தயாரித்த, ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த, 'பில்லியனர் 3 பாக்கெட்' என்ற விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று கைப்பற்றப்பட்டது.



latest tamil news


இதன் விலை 27 கோடி ரூபாய். 18 காரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரத்தில் 76 வைரக்கற்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 'இவ்வளவு விலை உயர்வான கைக்கடிகாரம் சமீபத்தில் பிடிபடவில்லை' என கூறிய அதிகாரிகள், கடத்தல்காரரை கைது செய்தனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
07-அக்-202215:43:22 IST Report Abuse
சாண்டில்யன் அத்தனையும் எங்கெல்லாம் யாருக்கெல்லாம் போகப் போகுதோ ஒரு ஆண்டுக்குப் பின் தேடித் பாருங்கள் ரிசல்ட் - கண்ணில் பட வாய்ப்பில்லை தேச துரோக வழக்கில் ரிமாண்ட்
Rate this:
Cancel
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
07-அக்-202210:11:51 IST Report Abuse
Radhakrishnan Seetharaman இதையே தான் சில கிரிக்கெட் வீரர்களும் செய்தனர். அது அப்படியே மூடி மறைக்கப்பட்டு விட்டது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
07-அக்-202209:52:35 IST Report Abuse
Girija உங்களுக்கு தெரியுமா, ஒரு பக்கம் N I A, என்போர்ஸ்மென்ட், சி பி ஐ மற்றும் வருமானவரித்துறை தீவிரவாத செயல்களுக்கு வெளிநாடுக்ளில் இருந்து எப்படி பணம் வருகிறது என்று தலையை பிய்த்து கொள்கிறது . மறுபுறம் வெளிநாட்டு பணம் உரிய ஆதாரம் இல்லாமல் கொண்டு வருவதை தடுக்க வேண்டிய கஸ்டம்ஸ் Amendment Act 50. 30/06/2017 படி, ஒரு வெளிநாட்டு பயணி, ஐந்தாயிரம் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு இணையான பிறநாடுகளின் பணத்தை அதாவது இந்திய மதிப்பில் ரூ 4 லட்சம் , தங்கள் ஹேண்ட் பேக் அதாவது கையில் இலவசமாக கொண்டுவரலாம் என்றும் அதை கஸ்டம்ஸ் இல் காண்பிக்க கூட தேவையில்லை என்று சொல்கிறது. மேலும் அந்த பயணிகள் கொண்டுவரும் தங்கம் போன்ற பொருட்களுக்கு டூட்டி விதித்தால், இவ்வாறு கையில் கொண்டுவரும் வெளிநாட்டு பணம் மூலம் கட்டினால், டூட்டி 10% ஆக குறைக்கப்படும். என்று சொல்ல்கிறது. இவ்வாறு கொண்டுவரும் பணம் வங்கியில் முறையாக மாற்றப்படுகிறதா என்று கஸ்டம்ஸ் கவனிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கும் கவலை இல்லை. இந்த பணம் யாரிடம் ஒரு தடயம் கூட இல்லாமல் போகும் என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள். தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் விதவிதமான சேவைகள் வெளிநாட்டில் வாழ் இந்தியருக்கு, வெளிநாட்டவருக்கு இருக்கும்போது, இந்த டிஜிட்டல் மயத்தில் தான் இந்த கூத்து . நாம் ATM அல்லது வங்கியில் இருந்து நம் சொந்தப்பணத்தை எடுக்க லிமிட் வைத்திருக்கிறது மத்திய அரசு ஆனால் கஸ்டம்ஸ் கேட்டை திறந்து வைத்துள்ளது, கடந்த ஐந்து வருடமாக. இது எப்படி இருக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X