வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது; இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி,'' என, சசி தரூர் கூறினார்.
![]()
|
சென்னையில் அவரது பேட்டி: தமிழகத்தில் வரவேற்பு அளித்த காங்., நிர்வாகிகளுக்கு நன்றி. தமிழக காங்., தலைவரிடம் பேசினேன். கட்சியினரிடம் ஆதரவு கேட்பது குறித்து வழி நடத்தினார்.தலைவர் தேர்தலில் போட்டியிட தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறேன். என்னுடன் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக, கட்சிக்காக உழைத்துள்ளார்.
தேர்தல் வந்தால் அதில் போட்டி இருக்க வேண்டும். அதனால் தான் போட்டியிடுகிறேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. வெற்றி பெற்றவர்களுக்கு பின்னால் இருந்து, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதை பா.ஜ., வேறு மாதிரியாக திசை திருப்ப பார்க்கிறது; அதற்கு காங்., இடம் தராது.
![]()
|
இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் காலை 6:00 மணிக்கு ராகுல் நடைபயணத்தை துவக்குகிறார். தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருடன் நடந்து செல்கின்றனர்.
இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறும்போது, கட்சியில் பெரிய எழுச்சி அடையும். அரசியல் திருப்பங்கள் உருவாகும். இது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தரும். பா.ஜ.,வின் தோல்விக்கு, காங்கிரசார் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., வலுவாக உள்ளது. இவ்வாறு சசி தரூர் கூறினார்.