ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை-'ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, போலீசார் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்' என, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை, போலீசார் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள், அங்கிருந்து சதி திட்டம் தீட்டுகின்றனரா; ஜாமினில் வெளியே வந்துள்ள ரவுடிகளின் அன்றாட நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

எனினும், ரவுடிகளின் 'ஆட்டத்தை' போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புற்றீசல்கள் போல, அரசியல் சார்பு ரவுடிகள் அதிகரித்து வருகின்றனர்.ரவுடிகளை ஒடுக்குவது காலத்தின் கட்டாயம். அப்போது தான், சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.அதற்காக, ரவுடி மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என, ஐ.ஜி.,க்கள், கமிஷனர்கள், எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து,


latest tamil news


போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:கூலிப்படை, வன்முறை வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவர்கள் மீதான, நீதிமன்ற விசாரணையை விரைந்து முடித்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளின் கோப்புகளை, 'துாசி' தட்டி, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

குற்றவாளிகளின் வழக்கு விபரம், புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும். 'டிஜிட்டல்' முறையில் பட்டியல் தயாரித்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202222:38:06 IST Report Abuse
Ram pollachi ஆப்பரேஷன் கஞ்சா முடிந்தது அடுத்து ஆப்பரேஷன் ரவுசா? சாதாரண முடிச்சு அவுக்கிளை அடக்க கூட மத்திய படைகள் தான் வரும் போல.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
07-அக்-202216:44:35 IST Report Abuse
DVRR அப்போ தலை முதல் கால் வரை தீவிர நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவு என்று எடுத்துக்கொண்டால் அதுக்கு அவ்வளவு பெரிய ஜெயில் டாஸ்மாக்கினாட்டில் இல்லையே ஏன்னா இது பரிபூர்ணமாக திராவிட மாடலுக்கு எதிராக இருக்குமே சரியா நன்றாக யோசனை செய்யவும்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
07-அக்-202214:35:23 IST Report Abuse
Kumar நல்ல வேளை அந்தப் பாட்டியை கைது செய்யவில்லை ,இவரின் உத்தரவைக் கேட்டு. படு பயங்கரமான பாட்டி அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X