வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுச்சேரி,-புதுச்சேரி கடற்கரை பகுதியில் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அமைப்பது குறித்து, நார்வே நாட்டின் சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
![]()
|
இந்தியா - நார்வே நாடுகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, கடல்சார் திட்ட மிடல் துறையில் கூட்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. ஆற்றல், போக்குவரத்து, மீன்பிடிப்பு, நீர்வாழ் உயிரின வளர்ப்பு, சூழல் பாதுகாப்பு, சுற்றுலா போன்ற துறைகளில் கடலில் மனித செயல்பாடுகள் திறமையான, பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் என இத்திட்டத்தில் அடங்கும்.இந்தோ-நார்வே ஒருங்கிணைந்த பெருங்கடல் முன்முயற்சி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்,
கடந்த 2019ல் கையெழுத்தானது. லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை இத்திட்டத்திற்கான முன்னோடி தளங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.கடல்சார் திட்டமிடல் திட்டத்தின் ஒரு பகுதியாக, சூழலியல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு கடந்த 5மற்றும் 6ம் தேதி ஓட்டல் அதிதியில் நடந்தது.இந்நிலையில் நேற்று காலை நார்வே நாட்டின் கடல் ஆராய்ச்சி நிறுவனம், சுற்றுச்சூழல் முகமை, துாதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் டாக்டர் எரிக் ஒல்சன் தலைமையில், முதல்வர் ரங்கசாமியை, வணிகவரித் துறை அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் சந்தித்து பேசினர்.
![]()
|
அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, கலெக்டர் வல்லவன், அறிவியல் தொழில்நுட்ப துறை செயலர் முத்தம்மா, இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.இச்சந்திப்பின்போது, புதுச்சேரி கடற்கரை பகுதியில் கடலோர ஆராய்ச்சிக் கான தேசிய மையம் அமைப் பது குறித்து, விவாதித்தனர்.
Advertisement