இது உங்கள் இடம்: பொய்யை பொருத்தமாக சொல்லுங்க!

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நடை பயணத்தால், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது' என, தெரிவித்துள்ளார், காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ். அனேகமாக, இது தான் இந்தாண்டின் மிகச் சிறந்த தமாஷாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நடை பயணத்தால், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது' என, தெரிவித்துள்ளார், காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ். அனேகமாக, இது தான் இந்தாண்டின் மிகச் சிறந்த தமாஷாக இருக்கும்.
latest tamil news


ராகுலை பற்றி அவ்வப்போது ஏதாவது புகழ்ந்து பேச வேண்டும் என்பது தான், காங்., மூத்த தலைவர்களுக்கு சோனியா பிறப்பித்திருக்கும் கட்டளையாக இருக்கும் போல. அதனால் தான், இப்படிப்பட்ட வேடிக்கையான கருத்தை கூறியிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ். ராகுல் மேற்கொள்வது ஒற்றுமைக்கான நடைபயணமாம்; ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒன்று சேர்க்கப் போகிறாராம். காங்கிரஸ்காரர்களே...முதலில் நீங்கள் கோஷ்டி சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள். அதன்பின் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். ராகுலின் நடை பயணத்திற்கு கோடி கோடியாக பணம் செலவாகியுள்ளது... அவ்வளவு தான். காங்., மூத்த தலைவர்கள் பூச்சாண்டி காட்டுவது போல, 'மக்களிடம் எழுச்சி, பா.ஜ.,வில் அதிர்ச்சி' என்பது எல்லாம், வெறும் பூச்சுற்றல். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் என்கிற விதமாக, ராகுல் நடைபயணம் ஆரம்பித்த உடனேயே, கோவாவில் ஒன்பது காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் அடைக்கலமாகி விட்டனர்.மேலும், பல எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் ஓடத் தயாராக உள்ளனர். போதாக்குறைக்கு, சிறந்த திறமையான, நேர்மையான மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதுக்கட்சி துவங்கி, 23 பேர் அங்கே போய் விட்டனர். ஆகவே, சும்மா நடைபயணம் அது, இது என்று உதார் விடாமல், ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்யப் பாருங்கள் ராகுல்... மக்களிடம் தற்போது எழுச்சி உள்ளது.


latest tamil newsஅது, உங்களின் நடைபயணத்தை பார்த்து அல்ல; புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் கோமாளித்தனத்தை பார்த்து, பா.ஜ., அதிர்ச்சி அடைந்துள்ளது என்ற பொய் தகவல்கள் எல்லாம் சொல்ல வேண்டாம்; யாரும் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், பொய் சொன்னாலும், பொருத்தமாகச் சொல்ல வேண்டும் அல்லவா! நன்றாக நடந்து செல்லுங்கள் ராகுல்ஜி. அது, மிகவும் நல்லது. கட்சிக்கு அல்ல... உங்கள் உடலுக்கு!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202222:46:06 IST Report Abuse
பேசும் தமிழன் ஜல்லிக்கட்டு தடை செய்ய முக்கிய காரணம்... இந்த ஆள் தான்.... கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்து... அந்த நல்ல காரியத்தை செய்து முடித்தார்... இவர்களை வாழ்க என்று... டாஸ்மாக் ஆட்கள் கோஷம் போடுவார்கள்... ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய பிஜேபி... ஒழிக என்பான்.....அது தான் டாஸ்மாக் மகிமை!!!
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
07-அக்-202219:43:18 IST Report Abuse
சீனி தமிழ் புத்தாண்டை அறிவாளி ஒருத்தன் மாத்தும் போதே இந்துக்கள் விழித்துக்கொண்டிருக்கவேண்டும். அதைதாண்டி, இப்போ நீ இந்துவா இல்லையா என்பதை, ஒரு கடவுள் மறுப்பு திராவிடனும், ஒரு சினிமா கூத்தாடியும், ஒரு கிரிப்டோ ரெளடியும், இன்னொரு மைக் உளருவாயனும் முடிவு செய்யும் போது, நீ குவாட்டருக்கு ஓட்டு போட்டுவிட்டு, எவன் என்ன பொய் சொன்னாலும் தலையில் துண்டு போட்டுக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு ஆமாஞ்சாமி என கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Ganesan - Vienna,ஆஸ்திரியா
07-அக்-202219:40:30 IST Report Abuse
Ramesh Ganesan One and only good thing about yatra is naming it after Bharath, the real name of this great country.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X