வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாமக்கல்-''தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
![]()
|
நாமக்கல்லில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க., அரசு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல். தி.மு.க.,வின் ஒரு அணியாக செயல்படும் காங்.,- கம்யூ.,- வி.சி.,க்கள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாக உள்ளது.
அதனால் தான் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பா.ஜ.,வின் கொள்கைகளை ஏற்று உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவதாக கூறி வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை தான்.தி.மு.க.,வில் கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருகிறது.
ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசும் முதல்வர் ஸ்டாலின், முதலில் விநாயகர் சதுர்த்திக்கும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கும், தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறட்டும்.ஹிந்து மதத்தைப் பற்றி அவதுாறாக பேசிய, அவரது கட்சியைச் சேர்ந்த ஆ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வி.பி.துரைசாமி மேலும் கூறியதாவது:வரும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கிறது. அப்போது, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடந்தால், நான் பொறுப்பல்ல என்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியுள்ளார்.இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் முடிந்தவுடன், மூன்றாவது முறையாக பிரதமராக மோடியும், தமிழக முதல்வராக முதன்முறையாக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் பதவியேற்பதும் உறுதி.இவ்வாறு கூறினார்.