'டெங்கு' காய்ச்சல் அதிகரிக்கும்: மூன்று மாதங்களுக்கு கவனம்!

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-'தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.



latest tamil news



தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டனர்.கடந்த ஆகஸ்டில் 481; செப்டம்பரில் 572 பேர் என, பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.பருவகால காய்ச்சல்களுடன், டெங்குவும் வேகம் எடுத்துள்ளது.

வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:மழை பெய்ய துவங்கி உள்ளதால், சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். அதனால், அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே, சுற்றுப்புறத்தில் நன்னீர் தேங்கக்கூடிய பொருட்கள், இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-அக்-202215:45:58 IST Report Abuse
S.Baliah Seer கொசு மருந்து தெளிக்கும் ஏரியாவில் மாற்றமில்லை. ஆனால் கொசு மருந்து புகை என்ன ஆனது. பஞ்சாயத்து ஏரியாவில் யாரும் கண்டுகொள்வதில்லை.
Rate this:
Cancel
07-அக்-202207:51:43 IST Report Abuse
ராஜா பொதுமக்கள் தான் உஷாராக இருந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் கொசு பெருக்கத்தை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்யாது. வெறும் RSB மீடியாவை வைத்து விளம்பரம் போடும் வேலை மட்டும் தான் நடந்துகொண்டு இருக்கிறது இந்த விடியா ஆட்சியில். தெருவெல்லாம் சாக்கடை, மழைநீர், குப்பையோடு சேர்ந்து நாறிக்கொண்டு இருந்தால் டெங்கு வராமல் திமுகவினர் கொள்ளையடித்ததில் பங்கா வரும்?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202207:47:32 IST Report Abuse
duruvasar மாசு என்ற மாமனிதன் துறை அமைச்சராக இருப்பதால் கொசுக்கள் பயத்தில் இருக்கின்றன. அவர் ஓடி போகும்போது எல்லா கொசுக்களும் ஓடிபோய் விடுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X