இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: 8 வயது மகளை கொலை செய்த தந்தை கைது

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்'ஹெராயின்' கடத்திய கேரள நபர் கைது மும்பை-மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ௧௬ கிலோ 'ஹெராயின்' போதைப் பொருளை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு, ஹெராயின் போதைப் பொருளுடன் கேரள நபர் ஒருவர் வருவதாக ரகசிய


இந்திய நிகழ்வுகள்
'ஹெராயின்' கடத்திய கேரள நபர் கைதுமும்பை-மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ௧௬ கிலோ 'ஹெராயின்' போதைப் பொருளை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு, ஹெராயின் போதைப் பொருளுடன் கேரள நபர் ஒருவர் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என்பவரிடம் சோதனையிட்டனர். இதில், அவரது பெட்டியில் மறைத்து வைத்து கடத்தி வந்த ௧௬ கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. பினு ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'வெளிநாட்டினர் ௮௨ ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாகக் கூறியதால், ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டேன்' என்றார். கடத்தலில் ஈடுபட்ட தன் கூட்டாளிகளின் பெயர்களையும் அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து, புதுடில்லியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கேரளாவின் கொச்சி கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் வந்த படகை நிறுத்தி, கடற்படையினர் சோதனையிட்டனர். அதில், ௨௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தப்படுவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த கடற்படையினர், பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரூ 27 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பறிமுதல்புதுடில்லி-துபாயில் இருந்து புதுடில்லி வந்த விமான பயணியிடம் இருந்து, 27 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லி விமான நிலையம் வந்த பயணியரிடம் நேற்று சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் ஏழு உயர் ரக கைக்கடிகாரங்கள், வைர 'பிரேஸ்லெட்' மற்றும் 'ஐ - போன் 14 ப்ரோ மொபைல் போன்' ஆகியவை கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு 'பியாகெட் லைம்லைட் ஸ்டெல்லா' மற்றும் ஐந்து 'ரோலக்ஸ்' கைக்கடிகாரங்கள் இருந்தன.

பியாகெட் கைக்கடிகாரம் 31 லட்சம் ரூபாய் மதிப்பும், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் தலா 15 லட்சம் ரூபாய் மதிப்பும் உடையவை.இவை தவிர, அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தங்க நகை மற்றும் கைக்கடிகார வடிவமைப்பு நிறுவனமான, 'ஜேக்கப் அண்டு கம்பெனி' தயாரித்த, ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த, 'பில்லியனர் 3 பாக்கெட்' என்ற விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதன் விலை 27 கோடி ரூபாய்.

18 காரட் வெள்ளை தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கைக்கடிகாரத்தில் 76 வைரக்கற்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 'இவ்வளவு விலை உயர்வான கைக்கடிகாரம் சமீபத்தில் பிடிபடவில்லை' என கூறிய அதிகாரிகள், கடத்தல்காரரை கைது செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்
மதுரையில் மகளை கொலை செய்து உடலை பரண் மீது வைத்த தந்தை கைது


மதுரை : மனைவி நடத்தையில் சந்தேகித்து, 8 வயது மகளை கொலை செய்து வீட்டில் பதுக்கி வைத்து தலைமறைவான டெய்லர் காளிமுத்து 34, கைது செய்யப்பட்டார்.latest tamil newsமதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களின் மகள் தர்ஷினி 8, மூன்றாம் வகுப்பு படித்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், சிலநாட்களுக்கு முன் பிரியதர்ஷினி மேலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள அவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக வெளியான தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தார். அங்கு அழுகிய நிலையில் மகள் தர்ஷினி இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், கணவர் காளிமுத்து, சிவகங்கையில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு மகளை அழைத்துச் செல்வதாக கூறியதாக, பிரியதர்ஷினி தெரிவித்தார்.

காளிமுத்து அலைபேசி எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் தலைமையில் ஜெய்ஹிந்துபுரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறியதாவது: ஊனமுற்ற காளிமுத்துவுக்கு, தொழிலில் போதிய வருவாய் இல்லை. தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி தன்னை மதிக்கவில்லை என்று தாழ்வு மனப்பான்மையில் இருந்தார். பின்னர் அவர் கோபித்துக் கொண்டு சென்றதால், தற்கொலை செய்ய முடிவெடுத்தார். தனக்குப் பின்னர் மகளை யார் கவனிப்பர் என்ற மனஉளைச்சலில் அதற்கான முயற்சியை தள்ளிப்போட்டார்.

இதையடுத்து மகளை கொலை செய்து வாளியில் உடலை வைத்து பரணில் வைத்து, இருநாட்கள் வீட்டிலேயே அமர்ந்து காவல் காத்தார். பின்னர் மனைவியிடம், மகளை தனது சகோதரி வீட்டில் விட்டுள்ளதாகக் கூறி சமாளித்தார். மேலுாரில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுஉள்ளார். அங்கிருந்தோர் அவரை மேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குணமாகி வெளியே வந்தபின் தன்னை போலீஸ் தேடுவதை அறிந்தார்.

மனநிலை பாதித்தவர் போல பழங்காநத்தம் பகுதியில் பேப்பர் பொறுக்கிக் கொண்டு சுற்றித்திரிந்தார். அவரை கைது செய்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


போத்தனூர் : மாவட்டம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒக்கிலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ.,சின்னகாமன் தலைமையில் போலீசார், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெள்ளாளர் காலனி, நான்காவது வீதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா வளர்ப்பது தெரிந்தது.அவ்வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டின் பின்புறம் வளர்க்கப்பட்டிருந்த, 1.6 கி.கிராம் எடையுள்ள ஐந்தரை அடி உயர செடியை அழித்தனர்.செடியை வளர்த்த, அவ்வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி முத்துபாண்டி, 50 என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


பள்ளி மாணவி கர்ப்பம்: நர்சரி உரிமையாளர் கைதுஊட்டி : ஊட்டியில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsநீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர்,50. இவர் வீட்டின் அருகே வசித்து வந்த, 14 வயது சிறுமியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். மாணவி, 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் விசாரணை நடந்ததில், 'பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளது,' உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, சேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். நேற்று ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கடை ஷட்டரை உடைத்து ரூ. 1.96 லட்சம் திருட்டுகடலுார்-உதிரி பாகங்கள் விற்பனை கடையின் ஷட்டரை உடைத்து, 1.96 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், சாவடியைச் சேர்ந்தவர் மனோகர், 42; இவர், கடலுார் பஸ் நிலைய லிங்க் ரோட்டில், மின் மோட்டாருக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம் போல் பூட்டிச் சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, பின்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. மேஜை டிராயரில் வைத்திருந்த ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.


கஞ்சா விற்ற இருவர் கைதுகள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று மதியம் 1:00 மணியளவில் ஏமப்பேர் சுடுகாட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் வெற்றி, 24; ஏமப்பேர் அக்ரஹார தெரு ஸ்ரீதர் மகன் சபரிராஜன், 23; ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஏமப்பேர் பிள்ளையார் கோவில் தெரு பச்சமுத்து மகன் ஆதிகேசவன், 21; என்பவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
07-அக்-202210:55:59 IST Report Abuse
RaajaRaja Cholan போஸ்கோ, சிறுவர் சிறுமிகளிடம் அத்துமீறுபவர்களுக்கு மரண தண்டனை தான் சரி, சல்லி ஜென்மங்கள், குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கடா, இல்லை என்றால் உயிரை மாய்த்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X