9ல் பா.ம.க.,வினர் மாரத்தான் ஓட்டம்

Added : அக் 07, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை--காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, நாளை மறுதினம் சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியுள்ள ஆபத்து காலநிலை மாற்றம். இப்போது வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பு, உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறதுவரும், 2100ம்
pmk, marathon, run, பாமக, மாரத்தான், ஓட்டம்

சென்னை--காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, நாளை மறுதினம் சென்னையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கியுள்ள ஆபத்து காலநிலை மாற்றம். இப்போது வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பு, உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறதுவரும், 2100ம் ஆண்டு-க்குள் சென்னை மாநகரின் மொத்த பரப்பில் 16 சதவீதம்; அதாவது 67 சதுர கி.மீ., கடலில் மூழ்கிவிடும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடற்கரையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்த, தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. காலநிலை மாற்ற அவசர நிலையை பிறப்பித்து, புவிவெப்பமாவதை தடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், நாளை மறுதினம் காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை, 'காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம்' என்ற தலைப்பில், மாரத்தான் ஓட்டம் நடக்க உள்ளது.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202218:32:54 IST Report Abuse
எவர்கிங் இந்த கன்வெர்ட் கிரிப்டோவுக்கு வண்ணியர் கொடுத்த ஆதரவு ஒம்போது....
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
07-அக்-202216:32:02 IST Report Abuse
BALU ஆமாம் மக்கா, கொஞ்சம் நஞ்சம் மிச்சமீதி இருக்கற பாமக தொண்டர்களும் மாரத்தான் ஓட்டத்தில் வந்து அப்படியே பாமக- வை விட்டு ஓடிப்போங்க மக்கா, இல்லைனா இவனுவோளே உம்ம வித்துத் தின்னுபுடுவானுவோஉம்மைய காப்பாத்திக்கிடுங்கோஅய்யா வாழ்ந்தது போதும்.இனியாவது நீங்க வாழ்ந்துக்கோங்க மக்கா.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
07-அக்-202216:14:03 IST Report Abuse
Mohan கால நிலை மாற்றம் முன்னேற்றம் வேண்டி பழக்க தோஷத்துல கோடாரி தூக்கிடாதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X