தேனி : தேனி சுப்பன் தெருவில் உள்ள பாரதிதாசன் பல்கலை., தொலைநிலை கல்வி மையத்தில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் பிளஸ் 2ம் வகுப்பு படிக்காமல் டிகிரி படிக்கலாம் என இதன் ஒருங்கிணைப்பாளர் ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நடப்பாண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கும் இளங்கலை, முதுகலை அறிவியல் பாட பிரிவுகளில் அட்மிஷன் நடக்கிறது. ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் பிளஸ் 2 வகுப்பு படிக்காமல் பட்டப்படிப்பில் சேரலாம். செய்முறை தேர்வு தேனியில் நடைபெறும். அக். 15 க்குள் சேருபவர்களுக்கு முதலாம் ஆண்டு தேர்வு கட்டணம் முற்றிலும் சலுகை வழங்கப்படும் என்றார். மேலும் விவரங்களுக்கு 99423 30605 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.